The second Sun Glies 710 is coming into the solar system

 பூமியை நோக்கி வரும் இரண்டாவது சூரியன்

பூமியை பாதுகாப்பதில் அதிதீவிரமாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அந்த வகையில் எமது சூரிய மண்டலத்திற்குள் இன்னொரு சூரியனின் வெகு தொலைதூரத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் எங்கள் பூமிக்கு ஆபத்துகள் எதுவும் வருமா ஒருவேளை அந்த சூரியன் எங்கள் சூரிய குடும்பத்திற்குள் வந்து விட்டால் என்ன நடக்கும் நிச்சயமாக மாபெரும் பிரளயமே நடக்கும் சூரிய குடும்பத்தில் ஆங்காங்கே எல்லாம் சிதறிப் போய்விடும். இப்படி ஒரு நிலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா வர இருக்கும் சூரியன் எவ்வளவு தூரத்தில் உள்ளது. எவ்வளவு காலத்துக்குள் சூரிய மண்டலத்துக்குள் வரும் வாய்ப்புக்கள் உள்ளது இந்த சூரியனை எப்படி கண்டு பிடித்தார்கள் என்பதை பற்றி தொடர்ந்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். </!doctype>

பூமியை நோக்கி வரும் இரண்டாவது சூரியன் Glies 710


Gaia space telescope ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட
Glies 710 சூரியன்

2013ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்டது Gaia space telescope இந்த  Gaia தொலைநோக்கி தான்  63.8 ஒளியாண்டு தூரத்தில் Glies 710 என்ற சூரியனை கண்டு பிடித்தது. Glies 710 சூரியன் சரியாக எங்கள் பூமியை நோக்கி தான் வருவதாக ஆய்வாளர்கள் கணித்து உள்ளார்கள்   Glies 710 சூரியன் மாத்திரம் எங்கள் சூரிய மண்டலத்துக்குள் வந்தால் பெரும் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் இருந்தாலும் இந்த சூரியன்  பூமிக்கு வராமல் போவதற்கும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ads  

Glies 710  சூரியன் தனக்கென எந்த ஒரு கிரகமும் இல்லாமல் தன்னந்தனியாகத் தான் விண்வெளியை உலாவி வருகிறது. ஆனால் Glies 710 சூரியன் எங்கள் சூரியனை விட 40% நிறை குறைவாக தான் இருப்பதாகவும் இந்த சூரியன் ஒரு மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் எங்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் தெரிய வருவதோடு பெரும்பாலும் இந்த சூரியன் எங்கள் சூரிய மண்டலத்துக்குள் வராமல் சூரிய மண்டலத்தை சுற்றி உள்ள  ஓர்ட் கிளவுட் பகுதியை கடந்து செல்லும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.



சூரிய மண்டலத்தை சுற்றி உள்ள ஓர்ட் கிளவுட் அளவீடுகள்

சூரிய மண்டலத்தை சுற்றி உள்ள ஓர்ட் கிளவுட் பகுதி எங்கே உள்ளது என்றால் சூரிய மண்டலத்தை சுற்றி ஒரு வட்ட வடிவில் பனிப்பாறைகள் ஆல் ஆனது தான் ஓர்ட் கிளவுட். இந்த ஓர்ட் கிளவுட்டில் ட்ரில்லியனுக்கும் அதிகமான பனி பாறைகள் இருக்குமென தெரிவித்துவரும் போது இந்த ஓர்ட் கிளவுட் பகுதி எமது சூரியனில் இருந்து ஒரு லட்சம் AU வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது AU என்பது பூமியிலிருந்து சூரியனுக்கு இருக்கும் தூரம் ஆகும் பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் தூரம் 15,000 கோடி இதைதான் ஒரு AU என்பதாகும். 

Glies 710 சூரியன் 576 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஒரு மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வந்து கொண்டிருக்கிறது இது மிகவும் குறைந்த வேகம் என்பதால் பூமியை வந்து அடைவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும் அதாவது சுமார் 13 லட்சம் வருடங்கள் ஆகும் பூமியை வந்து அடைவதற்கு ஏனென்றால் வெறும் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இந்த  Glies 710 சூரியன் வருவதால் இவ்வளவு காலங்கள் எடுக்கும் இருந்தாலும் எங்கள் சூரிய குடும்பத்துக்குள் உள்ளே வராமல் ஓர்ட் கிளவுட் பகுதி அருகாமையில் வந்து கடந்து சென்று விண்வெளியில் எங்காவது ஒரு பகுதிக்குள் செல்லவும் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இவை எல்லாம் நடப்பதற்கு இன்னும் 13 லட்சம் வருடங்கள் காத்திருக்க வேண்டும் அதற்குள் பூமிக்கு என்ன நிலை ஆகுமோ என்று தெரியாது. இருந்தாலும் 13 இலட்சம் வருடங்களுக்கு பின்னர் என்ன நடக்கப்போகிறது என்பதை இப்போது விஞ்ஞான அறிவியல் மூலமாக நாங்கள் அறிந்து விட்டோம் என்பதை எண்ணும்போது. விஞ்ஞானத்திலும் விண்வெளி அறிவியலிலும் எவ்வளவு முன்னேற்றத்தை அடைந்து உள்ளோம் என்பதை எண்ணும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும். ஆபத்துக்கள் நிறைந்த விடயங்களை அறியும்போது ஒரு தயக்கமாகவும் இருந்து வருகிறது. இதிலிருந்து தெரியவருகிறது இயற்கையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் நாங்கள் உணர முடிகிறது.


 Glies 710 சூரியன் ஓர்ட் கிளவுட் பகுதியை கடக்கும்போது
ஓர்ட் கிளவுட் பனிப்பாறைகள் பாதிக்கும் அனிமேஷன் காட்சிகள்

ஆய்வாளர்களின் கருத்தின்படி 13 லட்சம் வருடங்களுக்கு பின்னர் இந்த பூமி இருக்குமோ என்ற அச்சமும் நிலவி வரும் வகையில் ஆய்வாளர்கள் கூறியபடி ஓர்ட் கிளவுட் பகுதியை Glies 710 சூரியன் கடந்து சென்றால் எங்கள் பூமி தப்பித்துவிடும். இருந்தாலும் ஓர்ட் கிளவுட் பகுதியை Glies 710 சூரியன் கடக்கும்போது ஓர்ட் கிளவுட் பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் மிகவும் அதிகம் பலமாகத் தாக்கப்பட்டு அதிகப்படியான வால் நட்சத்திரங்களாக உருவாகி பூமியை கடந்து செல்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவும் அதுமட்டுமல்லாமல் பூமியிலும் அதிகமான வால் நட்சத்திரங்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.

விண்வெளி தொழில்நுட்பங்கள் அதிக வளர்ச்சி பெறுவதால் அதில் நிறைய நன்மைகளை அடைந்து வருவதை இவ்வாறான கண்டுபிடிப்புகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. இதே போன்று நிறைய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து எங்கள் பூமியை மேலும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பகுதியின் நிறைவு பகுதிக்கு வருகின்றோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை எங்கள் இணையதளம் வரவேற்கின்றது.

எங்கள் இணையதளத்தில் விண்வெளி சம்பந்தமான விடயங்கள் அனைத்தையும் தமிழில் உங்களுக்கு எளிய முறையில் அறியக்கூடிய வகையில் பதிவு செய்கின்றோம் தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்து கொண்டு விண்வெளி தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் எங்கள் இணையதளத்தில் உள்ள பதிவுகள் உங்கள் பார்வைக்கு

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுகள்

பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை

The new eight planets in tamil 

NASA's future moon missions in tamil

நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது

The James Webb Space Telescope can detect the universe in tamil

OSIRIS-REx spacecraft is speeding to Earth in tamil

The largest universe in space

Jupiter's Callisto Moon Salt Sea

NASA discovers planet without sun

Post a Comment

0 Comments