சூரியனின் ஒளி விண்வெளியில் எங்கு வரையும் செல்கிறது
சூரியனின் ஒளியானது எங்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு எட்டு நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த சூரிய ஒளியானது விண்வெளியில் எது வரைக்கும் செல்லும் என்பதை அறிந்து உள்ளீர்களா..? ஆம் அதை பற்றி தான் இந்த பதிவில் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் சூரியனின் ஒளியானது கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து தான். அதனுடைய ஒளியின் தன்மையும் வந்தடைகிறது அந்த வகையில் சூரியனின் முதலிடத்தில் இருக்கும் புதன் கோள் தொடக்கம் கடைசியில் இருக்கும் புளூட்டோ வரைக்கும். சூரியனின் ஒளி செல்கின்றது என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதையும் தாண்டி சூரிய ஒளி செல்கின்றது. சூரிய குடும்பத்தை சுற்றி டிஷ் வடிவில் பனிப்பாறைகள் அமைப்பு ஒன்று இருக்கின்றது. அதை தான் Oort Cloud என்பதாகும் இது சூரியனிலிருந்து சுமார் 5,000 AU வரை இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்து உள்ளார்கள். சரி முதலில் Au என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
விண்வெளியில் தூரத்தை அழைப்பதற்காக பயன்படுத்துவதுதான் AU எனப்படுவதாகும் இதன் முழு விளக்கமானது Astronomical unit இதை சுருக்கி தான் AU என்று அழைக்கின்றார்கள். இதில் ஒரு AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் தூரம் ஆகும் அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் தூரம் 15 கோடி கிலோ மீட்டர் இதைத்தான் ஒரு AU எனப்படுகிறது. இந்த அளவை வைத்து தான் வான்வெளியில் அளவீடுகளை செய்து வருகிறார்கள் அந்த வகையில் தான் சூரிய குடும்பத்தின் எல்லைப் பகுதியில் இருக்கும் Oort Cloud அளவீடுகளை செய்து வருகிறார்கள்.
![]() |
சூரியனின் ஒளியானது விண்வெளியில் Oort Cloud பகுதி வரை செல்கிறது |
இப்படி உருவாக்கிய பனிப்பாறைகள் தான் வால் நட்சத்திரங்களாக உருவாகி பூமியை சுற்றி வருவதோடு சூரியனையும் சுற்றி விட்டு மீண்டும் Oort Cloud பகுதிக்குள் சென்று விடும் இப்படி வரும்போது தான் சூரியனை நெருங்கும்போது சூரியனின் வெப்பத்தால் பனிப்பாறை உருகி அதில் இருக்கும் ஐஸ் கட்டிகள் பல கிலோ மீட்டர் வரை நீண்டதாக இருக்கும் எப்படி போகும் போதுதான் இதை வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது இந்த வால் நட்சத்திரத்தில் இருக்கும் கனிமங்கள் ஆனது ஐஸ், மீத்தேன், காபன் மோனோசைட், ஹைட்ரஜன் சைனட் ஆகிய கலவைகளை கொண்டதாக உள்ளது வால் நட்சத்திரம்.

சூரியனின் ஒளியானது யுரேனஸ் நெப்டியூன் இரண்டு கோள்களை சென்றடையும் போதே சூரியனின் ஒளி மிகவும் குறைந்து விடும் அதையும் தாண்டி சூரிய ஒளி செல்லும் போது இன்னும் சூரியனின் வெப்பம் குறைந்து கொண்டே போகும் சூரியனின் ஒளியானது ஒரு நொடிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே எங்கள் பூமியை வந்து அடைவதற்கு எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது இதேபோன்று நெப்டியூன் கோளுக்கு ஒரு நொடிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 4.5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் Oort Cloud பகுதியின் ஆரம்ப இடத்தை சூரிய ஒளி சென்றடைவதற்கு இவ்வளவு காலம் எடுக்கும் என்று பார்க்கப்போனால் 672 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது அதாவது 28 நாட்கள் எடுத்துக்கொள்ளும் Oort Cloud பகுதியின் ஆரம்ப இடத்திற்கு சூரிய ஒளி சென்றடைவதற்கு அப்ப நீங்க நினைக்கலாம் இதுதான் சூரிய ஒளி சென்றடையும் கடைசி இடமாக இருக்குமா என்று நிச்சயமாக சொல்ல முடியாது ஏனென்றால் Oort Cloud பகுதியை ஆராய்ச்சி செய்வதற்கு பூமியிலிருந்து எந்த விண்கலமும் அங்கு செல்லவில்லை இதனால் அப்பகுதியை முழுமையாக ஆராய்ச்சி செய்யாமல் சூரிய ஒளியில் வெப்பம் கடைசி எல்லையானது இதுவாக இருக்கும் என்று சரியாக கணிக்க முடியாது வருங்காலத்தில் அந்த இடத்தையும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டால் மேலும் பல தகவல்களை அறியக்கூடியதாக இருக்கும்.
ஆனால் இப்போதைய காலகட்டத்திற்கு அது சாத்தியம் ஆவதற்கு வாய்ப்பில்லை ஏனென்றால் அவ்வளவு தொலைதூரத்தில் இருக்கிறது Oort Cloud பகுதி இப்போது விண்வெளியில் பல நீண்ட பயணத்தை மேற்கொண்டு வரும் வாயேஜர் விண்கலம் ஒரு நொடிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் கூட Oort Cloud பகுதியின் ஆரம்ப எல்லை பகுதியை அடைவதற்கு 300 வருடங்கள் வரை ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்கள் அதேபோன்று Oort Cloud பகுதியின் முழுவதையும் கடந்து செல்வதற்கு 30 ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Oort Cloud பகுதியிலிருக்கும் பனி பாறைகள் எல்லாம் சூரியன் உருவாகிய போது சூரியனுக்கு அருகில் தான் இருந்திருக்க வேண்டும் என்றும் காலப்போக்கில் பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகியவை தங்களுடைய சுற்றுப்பாதையை சீரமைத்து கொள்வதற்காக இந்த பாறைகள் அனைத்தையும் விலகிச் சென்று இருக்கலாம் இதனால் இவைகள் அனைத்தும் சூரியனின் எல்லை பகுதியை சென்றிருக்க கூடும் என்றும் ஆய்வாளர்களின் கருத்தாகவும் இருந்து வருகிறது.
எமது சூரிய குடும்பம் அமைந்திருக்கும் எல்லையை சுற்றியுள்ள Oort Cloud பகுதியே இவ்வளவு தொலை தூரத்தில் இருக்கிறது என்றால் இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது இந்த பிரபஞ்சத்தையும் தாண்டி எவ்வளவு பெரிய வெற்றிடங்கள் இருக்கும் என்பதை நினைக்கும்போது வியப்பாகத்தான் உள்ளது என்பதை கூறிக்கொண்டு இந்த பதிவின் நிறைவு பகுதியை வந்த அடைகின்றோம் இதேபோன்று விண்வெளி தகவல்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வதற்கு எங்கள் இணைய தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள் விண்வெளியில் மர்மங்கள் மற்றும் புதிய தேடல்கள் உள்ளடங்கலான அனைத்து விடயங்களையும் தமிழில் எளிய முறையில் அறிந்து கொள்ளும் வகையில் தங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. இவை அனைத்தும் உங்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும் என்பதால் தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்து கொண்டு பயன் பெறுங்கள்.
0 Comments