The Hubble telescope has started working again

 Hubble telescope மீண்டும் உயிர் பிழைத்து கொண்டது

Hubble telescope


கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடக்கம் Hubble telescope இன் பேலோட் கம்ப்யூட்டர் இயங்காமல் இருந்தால் கடந்த ஒன்றரை மாதமாக எந்த விதமான தகவல்களையும் பெறமுடியாமல் Hubble telescope பூமியை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது ஆராய்ச்சியாளர்களின் கடுமையான முயற்சியால் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது.

விண்வெளியின் சூப்பர் ஸ்டார் என்றால் Hubble telescope மட்டும் தான். என்று சொல்லவேண்டும் விண்வெளியில் எங்களுக்கு தெரியாத விடயங்கள் அனைத்தையும் கண்டுபிடித்து தந்துள்ளது. ஆம் விண்வெளியில் நெபுலாக்கள், நட்சத்திரங்கள், புதிய கிரகங்கள், வியாழனின் கோளின் கனிமீடு நிலவில் தண்ணீர் இருப்பதை யும்  கண்டுபிடித்து தந்தது Hubble telescope தான். 

விண்வெளி ஆய்வு செய்வதற்காக ஹப்பிள் தொலைநோக்கி 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 31 வருடங்களாக பூமியை சுற்றி வலம் வந்து கொண்டு விண்வெளியில் மூன்று இலட்சத்திற்கும் மேலான படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. என்பதை பார்க்கும் போது உண்மையிலேயே Hubble telescope விண்வெளியின் சூப்பர் ஸ்டார் தான். அக்காலகட்டத்தில் ஹப்பிள் தொலைநோக்கி தயாரிக்கப்பட்ட போது செலவானது 35000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இப்போதைய மதிப்பின்படி ஹப்பிள் தொலைநோக்கியின் மதிப்பானது 65,000 கோடி வரை இருக்கும் என்று மதிப்பு செய்யப்பட்டுள்ளது.

Hubble telescope இயங்காமல் போனது எதனால்

Hubble telescope இயங்காமல் போனது எதனால் என்றால் ஹப்பிள் டெலஸ்கோப்பில் இருக்கம் Payload computer இயங்க மறுத்ததால் இதன் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஹப்பிள் டெலஸ்கோப்பில் இரண்டு Payload computer இருப்பதால் மாற்ற கம்ப்யூட்டரையும் இயக்குவதற்கு முயற்சி செய்தபோது அதுவும் இயங்க மறுத்துவிட்டதால் கம்ப்யூட்டரில் பிழையில்லை வேறு எங்கேயோ தான் பிழை ஏற்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள்  ஹப்பிள் டெலஸ்கோப் இல் இருக்கும் பாகங்கள் ஒவ்வொன்றையும் ஆராயத் தொடங்கினார்கள் இறுதியில் ஹப்பிள் டெலஸ்கோப்பில் உள்ள பவர் யூனிட்டில் தான் பிழை இருக்கிறது என்பதை கண்டுபிடித்தார்கள். ஜூலை மாதம் 15ஆம் திகதி மிக பொறுமையாக ஹப்பிள் தொலைநோக்கியை இயக்க தொடங்கினார்கள் தொடர்ந்து 15 மணித்தியாலம் இதன் செயல்பாடு நீடித்துக்கொண்டிருந்தது இறுதியில் 17ஆம் திகதி மிக வெற்றிகரமாக மீண்டும் ஹப்பிள் டெலஸ்கோப் விண்வெளியில் இயங்கத் தொடங்கிவிட்டது. அதாவது மீண்டும் உயிர் பிழைத்து விட்டது Hubble telescope.

ARP MADORE2115-273 , ARP MADORE0002-503  
ஹப்பிள் தொலைநோக்கி
 இயங்கிய பின் எடுத்த முதல் படம் தயாரிப்பு Nasa

வெற்றிகரமாக இயங்க தொடங்கிய பின்பு Hubble telescope விண்வெளியை நோக்கி ஆராயத் தொடங்கியபோது இரண்டு Galaxyயும் படம் பிடித்ததும் காட்டியுள்ளது. இங்கு வழங்கப்பட்டுள்ள படத்தில் முதலாவதாக இருக்கும் Galaxy  ARP MADORE2115-273 இந்த Galaxy பூமியிலிருந்து 297 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது இந்த Galaxy ஆனது இன்னும் முழுமையாக உருவாகி முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்கள். ஏனென்றால் ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்களை தான் படமெடுக்கும் அதனால் இப்போது உருவாகிக் கொண்டே இருக்கும் Galaxy  முழுமையாக உருவாகி இருக்கலாம் அல்லது நடு நிலையிலும் இருக்கலாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் முழுமையாக உருவாகி வரும்வரைக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்ததாக இரண்டாவதாக இருக்கும்  ARP MADORE0002-503 Galaxy இது எங்கள் பூமியில் இருக்கும் Milky Way galaxy போல் ஒரு Perseus Arm Galaxy போல் இருப்பதாகவும் இந்த Galaxy பூமியிலிருந்து 490 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. இதில் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பதாகவும் மற்றும் நெபுலாக்கள் அதிகமாக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த Galaxy ஆனது எங்களுடைய Milky Way galaxy விட பெரிதாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள் இதில் இருக்கும் ஒரு சூழலின் விட்டம் மட்டம் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ஒளி ஆண்டு கொண்டிரக்கும் என்று  கண்டறிந்துள்ளார்கள். பழுதை சீர் செய்த பின்பு ஹப்பிள் தொலைநோக்கி இந்த இரண்டு Galaxyயும் மிகத் துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் Hubble telescope  சீராக இயங்குகிறது என்பதை உறுதிபடுத்திய விட்டதால் இனி விண்வெளியின் ஹப்பிள் தொலைநோக்கியின் தேடல் வேட்டையை  தொடங்கிவிடும்.

ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் எப்படி இயங்குகிறது

Hubble telescope from space
 Working scenery


ஹப்பிள் தொலைநோக்கி பூமியிலிருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை பூமியை சுற்றி முடிப்பதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு 27 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை முழுமையாக சுற்றி முடிப்பதற்கு 97 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் எப்படி படம் பிடிக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ள படத்தை நன்றாக பாருங்கள். ஹபிள் தொலைநோக்கியில் Primary Mirror பகுதியில் ஒளியானது உள்சென்று மீண்டும் secondary mirror பட்டு தெரிபடைந்து Focal Point வழியாக உள்  சென்று ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக  Infrared மற்றும் அல்ட்ரா வயலட் மூலமாக கன்வெர்ட் செய்யப்பட்டு தரவுகள் அனைத்தும் பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக 1400 லட்சம் ஒளி ஆண்டு வரை தனது பார்வையால் படம் பிடிக்க முடியும் என்பதால் விண்வெளியில் மர்மமான விடயங்கள் அனைத்தையும் தேடி அலசி கண்டுபிடித்து கொண்டே இருக்கிறது என்றால் உண்மையிலே வியப்புக்குரிய விடயம் தான். 

விண்வெளியின் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை நினைத்து வியப்புக்கும் உள்ளாகும் போது மேலும் ஒரு ஆச்சரியம் தரும் வகையில்  மிக விரைவில் வெளிவர இருக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியை ஆராய தொடங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் இருந்தாலும் அனைவரின் மனதில் என்றும் இடம்பிடித்து கொண்டிருக்கும் ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் எண்ணற்ற  சாதனைகளை படைத்து வந்துள்ளது என்பதால் எல்லோரும் மனதிலும் என்றும் ஹப்பிள் தொலைநோக்கிக்கு ஒரு இடம் இருக்கும்.

வெற்றிகரமாக ஹாப்பி தொலைநோக்கி இயங்கத் தொடங்கி விட்டதால் இனிய ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக வரும் புதிய தகவல்கள் அனைத்தையும் எங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட உள்ளதால் தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்திருங்கள் விண்வெளியில் நடக்கும் அனைத்து தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.


மேலும் எங்கள் இணையதளத்தில் இருக்கும் பதிவுகள் உங்கள் பார்வைக்கு

phobos moon of mars

சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் சுற்றும் வேகம்

பூமியை நோக்கி வரும் இரண்டாவது சூரியன்

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுகள்

பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை

The new eight planets in tamil 

NASA's future moon missions in tamil

நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது

The James Webb Space Telescope can detect the universe in tamil

OSIRIS-REx spacecraft is speeding to Earth in tamil

The largest universe in space

Jupiter's Callisto Moon Salt Sea

NASA discovers planet without sun







Post a Comment

0 Comments