NASA discovers planet without sun

 சூரியன் இல்லாமல் கிரகங்கள்  உருவாகிறது நாசா கண்டுபிடிப்பு

விண்வெளியில் ஒரு சூரிய குடும்பம் உருவாக வேண்டுமென்றால் நிச்சயமாக ஒரு நட்சத்திரம் இருக்க வேண்டும் அந்த நட்சத்திரங்களை சுற்றி தான் கிரகங்கள் சுற்றும் என்பதுதான் நாங்கள்அறிந்திருந்தோம். ஆனால் இப்போது சூரியன் இல்லாமல் கிரகங்கள் உருவாகி வருவதையும் நாசா கண்டுபிடித்துவிட்டார்கள். நீங்கள் நினைக்கலாம் இது எப்படி சாத்தியமாகும் இந்த பிரபஞ்சத்தில் மாபெரும் வெடிப்பின் மூலமாகத்தான் எங்கள் சூரிய குடும்பத்தில் இருக்கும் அனைத்து கிரகங்களும் உருவாகி சூரியனை சுற்றி வலம் வருகிறது என்பதையும். சூரியனின் ஆற்றல் மூலமாக தான் அனைத்து கிரகங்களும் சூரியனை சுற்றி வருகிறது அப்படி இருக்கையில் எப்படி சூரியன் ஒன்று இல்லாமல் கிரகங்கள் உருவாகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுவது எனக்கு புரிகிறது சரி வாங்க இந்த தகவலை தொடர்ந்து முழுமையாக பார்ப்போம்.

Brwn dwars வட்ட வடிவில் தூசுகள் சூழ்ந்து இருக்கும் காட்சி

பூமியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதுதான் OTS 44 என்ற நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆனால் இது நட்சத்திரமும் இல்லாமல் ஒரு கிரகமாகவும் இல்லாமல் தோல்வி அடைந்த நட்சத்திரமாக இருப்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள். இதை பழுப்புக் குள்ளன் அல்லது Brwndwars என்று சொல்லப்படுகிறது.Brwndwars வியாழன் கோளை விட 80 தொடக்கம் 90 மடங்கு பெரிதாக இருப்பதாகவும் இதை சுற்றி ஒரு வட்ட வடிவில் நிறைய தூசுகள் பாறைகளைக் கொண்டு மாபெரும் வட்ட வடிவில் கிரகங்கள் உருவாகும் வகையில் இருப்பதையும் அதில் பூமியைப் போல் ஐந்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் உருவாகி வருவதையும் அவதானித்து உள்ளார்கள்.

Brwn dwars நட்சத்திரத்தை சின்ஃபேனி தொலைநோக்கி
                    மற்றும் நாசாவின் Spitzer space telescope கண்டுபிடிக்கும் காட்சிகள்

Brwndwars முதல் தடவையாக கண்டுபிடித்தது ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் சின்ஃபேனி தொலைநோக்கி மூலமாக தான் கண்டுபிடிக்கப்பட்டது இந்த தொலைநோக்கி மூலமாக கண்டுபிடித்த போது அதிகமான தெளிவில்லை காரணமாக அதை முழுமையாக ஆய்வு செய்ய முடியாமல் போனது ஏனென்றால் அங்கு மாபெரும் தூசுகளை  வட்ட வடிவில் காணப்படுவதால் சின்ஃபோனி தொலைநோக்கில் ஸ்பெக்ட்ரோகிராஃப் மூலமாக தெளிவாக பார்க்க முடியாமல் போனது. இதன் பின்புதான் 2003 ஆகஸ்ட் 25 நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மூலமாக அனுப்பப்பட்டது Spitzer space telescope இந்த தொலைநோக்கி 2003 டிசம்பர் 18 அளவில் தனது இலக்கை அடைந்து Brown Dwarfs ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது தான் மிக ஆச்சரியமான வகையில் Brown Dwarfs இருந்து  நிறைய தகவல்களையும் நாசாவின் Spitzer space telescope அதிசக்திவாய்ந்த ஸ்பெக்ட்ரோகிராஃப் மூலமாக அவதானித்த போதுதான் நிறைய தகவல்களை காணக்கூடியதாக இருந்தது. ஒரு தோல்வியடைந்த நட்சத்திரத்தில் இப்படியான கிரகங்கள் உருவாக முடியுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் வியப்பு அடையும் வகையில் இந்த கண்டுபிடிப்புகள் உள்ளது.

 

Brwndwar ஒரு நட்சத்திரம் ஆகவும் இல்லாமல் ஒரு கிரகமாகவும் இல்லாமல் அதாவது ஒரு நடுத்தரத்தில் இருந்து வருகிறது இது எப்படி நிகழும் என்றால் ஒரு நட்சத்திரமாக உருவாகுவதற்கு அங்கு அணுக்கரு உற்பத்தி நிச்சயமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மாத்திரம் தான் ஒரு நட்சத்திரமாக மாற முடியும். ஆகையால் தான் Brwndwars ஒரு தோல்வியடைந்த நட்சத்திரமாக காணப்படுகிறது இருந்தபோதும் இதனுடைய வெப்பமானது 2300 கெல்வின் வெப்பத்தை கொண்டிருப்பதையும் ஆய்வுகள் மூலமாக அறிய முடிந்த போதும். அங்கு ஏதாவது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட கிரகங்கள் இருப்பதாக பார்க்கப் போனால் அதற்கும் வாய்ப்புகள் இல்லை ஏனென்றால் ஒரு கிரகம் சீராக இயங்குவதற்கு நிச்சயமாக சமநிலையான வெப்பம் என்பது வேண்டும் அதாவது எங்கள் பூமியை போல் சீரான வெப்பநிலை ஒன்று இருந்தால் மாத்திரம் தான் தண்ணீர் திரவ வடிவில் இருந்து மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளும் இருக்கும்.ஒரு தோல்வியடைந்த ஒரு நட்சத்திரத்தில் இருந்து இப்படி மாபெரும் கிரகங்கள் உருவாக்க முடியும் என்பதை விண்வெளியில் பார்க்கும்போது உண்மையில் விண்வெளியில் இன்னும் அறிய முடியாத நிறைய மர்மங்கள் இருப்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது. ஒருவேளை இது ஒரு மாபெரும் சூரிய குடும்பமாக இருந்து அழிந்து போகும் நிலையில் மாறிக்கொண்டு போயிருக்கலாம் என்று பார்த்தாலும் ஒரு சூரிய குடும்பம் அழியுது என்றால் அது தனது சூரியனின் ஆய்வு காலம் முடியும்போது அது மாபெரும் பெரும் வெடிப்பாக வெடித்து அந்த இடத்தையே சின்னாபின்னமாகி விடும் ஆனால் Brwndwars அவ்வாறான நிகழ்வுகளும் இடம்பெறாமல் புதிதாக கிரகங்கள் உருவாவது போல் காணப்படுவதே ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. ஒரு தோல்வியடைந்த நட்சத்திரத்தை சுற்றி தூசிகள் பாறைகள் கொண்டு கிரகங்கள் உருவாகி வருகிறது என்பதை பார்க்கும் போது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் குழப்பத்திற்கு உள்ளாகி தான் விடுகிறது இவ்வாறான கண்டுபிடிப்புகள்.

Brwndwars ஒரு நட்சத்திரமும் இல்லாமல் ஒரு கிரகமாகவும் இல்லாமல் இருப்பதால் இதில் Brwndwars வட்ட வடிவில் தூசிகளை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் கிரகங்கள் அனைத்தும் Brwndwars தான் சுற்றி வர வேண்டும் இப்படி உருவாகும் கிரகங்கள் அனைத்தும் ஒரு சூரியனை சுற்றி வராது என்பதால் Brwndwarsயின் நிலவுகள் ஆக மாறுமா என்ற சந்தேகமும் ஆய்வாளர்களின் மத்தியில் உள்ளது. உண்மையில் விண்வெளியில் சில ஆய்வுகளில் சரியான முடிவுகளையும் தெளிவாகவும் எடுக்க முடியாத நிலையும் உருவாகும் இதற்குக் காரணம் விண்வெளியில் இப்படிதான் இருக்கும் என்று சரியான முடிவு  எடுக்கவும் முடியாது. இன்னும் மனிதனின் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக தான் இன்னும் விண்வெளி காணப்படுகிறது.

Brwndwars என்ற தோல்வியடைந்த நட்சத்திரத்தில் வட்ட வடிவில் தூசுகள் கொண்ட இடத்தில் பல கிரகங்கள் உருவாகி வருகிறது இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகும் முழுமையான ஒரு கிரகமாக உருவாக்குவதற்கு அதுவரைக்கும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Brwndwars எப்படிப்பட்ட மாற்றங்கள் உருவாக்கப்படுகிறது என்று. இதிலிருந்து தெரிய வருவது விண்வெளி என்பது ஒரு பரந்த இடம் இன்னும் எங்கள் கண்களுக்குள் அகப்படாமல் நிறைய மர்மங்கள் ஒளிந்திருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. விண்வெளியில் தேடிக் கொண்டே போனால் தேடலுக்கு பஞ்சம் இல்லை என்பதை Brwndwars கண்டுபிடிப்புகளை காணும்போது தான் அறியக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான கண்டுபிடிப்புகளும் எதிர்கால சந்ததிகள் விண்வெளி துறை மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் இவ்வாறான  கண்டுபிடிப்புகளும் உதவியாக இருக்கும்.

விண்வெளியின் தேடல் என்பது பல யுகங்கள் கடந்தாலும் முழுமையாக அறிவது கடினம் என்பதே தெரிவித்துக்கொண்டு இந்த பதிவின் நிறைவு பகுதிக்கு வருகின்றோம். இந்த பதிவை பற்றி உங்களுடைய கருத்துக்களை எங்கள் இணையதளம் வரவேற்கின்றது மேலும் விண்வெளி தகவல்கள் அனைத்தையும் தமிழில் நீங்கள் மிகத் தெளிவாக அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்து இருங்கள். 


மேலும் விண்வெளி தகவல் உங்கள் பார்வைக்கு

.செவ்வாய் கிரகத்தின் ஆய்வுகள்

பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை

The new eight planets in tamil 

NASA's future moon missions in tamil

நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது

The James Webb Space Telescope can detect the universe in tamil

OSIRIS-REx spacecraft is speeding to Earth in tamil

The largest universe in space

Jupiter's Callisto Moon Salt Sea


Post a Comment

0 Comments