பூமியின் ஆரம்ப காலம் எப்படி இருந்தது
OSIRIS-REx வின்கலம் தகவல் கொண்டு வருகிறது
எமது சூரியக் குடும்பத்தின் ஆரம்ப காலம் எப்படி இருந்திருக்கும் என்றும். பூமி உருவாகிய போது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக பூமியிலிருந்து 28,000 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பென்னு என்ற சிறு பெனிலிருந்து சிறு பாறை துண்டுகளை எடுத்துக் கொண்டு எங்கள் பூமியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது OSIRIS-REx வின்கலம் இந்த விண்கலம் கொண்டுவரும் பாறை துகள்களை சரியாக பூமிக்கு வந்தடைந்தாள் எங்களுடைய பூமியின் ஆரம்பகாலம் எப்படி இருந்தது என்பதை அறிந்திட மிக அரிய வாய்ப்பாக இருக்கும். சரி இந்த பென்னு சிறு கோளில் இருந்து கொண்டுவரப்படும் பாறை துகள்கள் மூலமாக பூமியின் ஆரம்ப காலம் எப்படி இருந்தது என்பதை அறிய முடியும் என்று எப்படி விஞ்ஞான ஆய்வாளர்கள் கண்டு பிடித்தார்கள் என்றால் இந்த பென்னு சிறு கோள் 450 கோடி பழமையான சிறுகோள் என்பதை கண்டுபிடித்து உள்ளார்கள் இதனால் பென்னுவில் இருந்து மாதிரிகளை கொண்டு வந்தால் பூமியின் ஆரம்ப காலம் மற்றும் இந்த சூரிய குடும்பத்தின் ஆரம்பகாலம் எப்படி இருந்தது என்பதை அறிய முடியும் என்பதற்காக பாறை துகள்களை கொண்டு வருவதற்காக OSIRIS-REx வின்கலம் சென்றுள்ளது.
![]() |
பென்னு சிறுகோள் இடமிருந்து OSIRIS-REx வின்கலம் தோன்றும் மாதிரி காட்சிகள் |
பென்னு சிறுகோள் 1999 11 செப்டம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது இதனுடைய சராசரி ட்டம் 490 மீட்டர் இந்த பென்னு சிறுகோள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழன் கோளுக்கு இடையில் இருக்கும் சிறுகோள் பட்டியலிலிருந்து விலகி சென்று சென்றிருக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள் இதை முழுமையாக ஆய்வு செய்யும்போது தான் எங்கள் பூமியின் தோற்றம் எப்படி இருக்கின்றது ஆரம்ப காலத்தில் என்னவிதமான கனிமங்கள் இருந்ததென்பதை அறிய முடியும் என்பதற்காகத் தான் பென்னு சிறுகோள்ளை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்கள் பென்னு சிறுகோள்ளில் அதிகமான காபன் இருப்பதாகவும் இதனால்தான் பென்னு சிறுகோள் கருமை நிறத்தில் தோன்றுவதாகவும் ஆய்வுகளில் தெரிய வருகிறது.
பென்னு சிறுகோள்ளில் சிறு கற்பாறை தூசிகளை எடுத்து வருவதற்காக OSIRIS-REx வின்கலம் 2016 செப்டம்பர் 8ஆம் திகதி பூமியில் இருந்து புறப்பட்டது நீண்ட தூர பயணத்திற்கு பின்பு 2018 டிசம்பர் 3 ஆம் திகதி பென்னு சிறு கோள்ளின் சுற்றுவட்ட பாதைக்குள் உள் நுழைந்தது அங்கிருந்து பென்னு சிறுகோள்ளின் மேற்பரப்பை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து தகவல் அனைத்தையும் நாசா கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்தது.
பென்னு சிறுகோள்ளில் OSIRIS-REx வின்கலம் லேண்டர்
![]() |
OSIRIS-REx spacecraft பென்னு சிறு கோளின் இருந்து பாறை துகள்களை சேகரித்து பென்னு கோளில் இருந்து புறப்படும் காட்சி |
OSIRIS-REx வி5ன்கலம் பென்னு சிறுகோள் மீது 2018 ஆம் ஆண்டு தரையிறக்கப்பட்டது. பென்னு சிறுகோலில் இருந்து 60 கிரைம் அளவிலான பாறை துண்டுகளை எடுத்துக் கொண்டு தனது எஞ்சினை ஃபயர் செய்து தொடர்ந்து ஏழு நிமிடம் ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பென்னு சிறு கோளிலிருந்து பூமியை நோக்கி பயணத்தை தொடங்கியது. 28,000 கோடி கிலோ மீட்டரில் இருந்து எங்கள் பூமியை நோக்கி வருகிறது என்றால் எவ்வளவு நுட்பமாக இந்த OSIRIS-REx விண்கலத்தை தயாரித்து இருக்க வேண்டும் சரி இது எப்படி பூமியை நோக்கி சரியாக வரும் என்றாள் OSIRIS-REx விண்கலத்தில் நேவிகேஷன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது இதைப் பயன்படுத்தி தான் பூமியுடன் தொடர்பு ஏற்படுத்தி வரும் ஆனால் இப்போது நேவிகேஷன் கேமராவை நிறுத்திவிட்டு பூமியில் இருக்கும் DS antenna மூலமாக OSIRIS-REx விண்கலத்தை தொடர்பு கொள்வார்கள்.
![]() |
Deep Space Network antenna |
இப்படி தொடர்புகளை கொள்ளும்போது OSIRIS-REx விண்கலத்தில் இருந்து வரும் சமிக்கி வைத்து எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று கணித்து விடுவார்கள் இதை வைத்துதான் OSIRIS-REx வின்கலம் சரியாக 24 செப்டம்பர் 2023 ஆண்டில் பூமியை வந்து அடையும் என்பதை மிகத் துல்லயமாக கணித்து விட்டார்கள். ஆனால் OSIRIS-REx வின்கலம் பூமிக்கு வராது பூமியின் வளிமண்டலத்திற்கு மேல் ஓரிடத்தில் இருந்து அதில் இருக்கும் கேப்சூல் தான் பூமிக்கு வரும் இதில்தான் ஒரு மாபெரும் பிரச்சனை உள்ளது அது என்னவென்றால் பூமியின் வளிமண்டலத்தில் கேப்சூல் வரும்போது வளிமண்டலத்தின் உராய்வினால் எரிய தொடங்கும் இருந்தாலும் உராய்வைத் தடுக்கும் சீட் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் ஓரளவுக்கு ஆபத்தில்லாமல் தான் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை OSIRIS-REx வின்கலம் பூமிக்கு சரியாக கேப்சூல்லை தரை இறங்க முடியாமல் போனால் மீண்டும் 2025 ஆம் ஆண்டளவில் தான் பூமிக்கு வரும் அப்ப இந்த OSIRIS-REx வின்கலம் எங்கே போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ஆம் இது மீண்டும் வேறொரு சிறு கோள்களை ஆய்வு செய்வதற்காக போய்விடும் அதற்குத் தேவையான ஏறி வாய்ப்புகள் அனைத்தும் OSIRIS-REx விண்கலத்தில் இருப்பதால் மீண்டும் ஆய்வுகளை செய்து கொண்டு பூமிக்கு வருவதற்கான எரிவாயுகள் இருக்கிறது. சரியாக திட்டமிட்டபடி OSIRIS-REx வின்கலம் விண்கலம் பூமிக்கு வந்தாள் 450 கோடி வருடங்களுக்கு முன் பழமையான பாறைத் துண்டுகள் மூலமாக பூமியின் ஆரம்ப காலத்தை அறிந்து கொள்வதற்கு மிக அரிய வாய்ப்பாக இருக்கும். உண்மையிலேயே இது மாபெரும் ஒரு சாதனைதான் முதல் தடவையாக விண்வெளியில் இவ்வளவு தூரத்தை கடந்து மனிதனால் எடுத்து வரப்படும் ஒரு பொருள் என்றாள் பென்னுவின் பாறை துண்டுகள் தான். உண்மையில் மனித குலத்திற்கும் மனிதனால் உருவாக்கப்படும் விஞ்ஞானத்துறை எடுக்கும் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
நாம் இன்னும் விண்வெளியை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் இப்போதைய காலகட்டத்தில் அதாவது மனிதனின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விண்வெளியை ஓரளவுக்கு அறிந்து கொண்டு விட்டார்கள் இன்னும் 50 வருடத்திற்கு பின்பு விண்வெளித்துறையில் மாபெரும் மாற்றங்கள் நிகழவிருக்கும் அதற்கான முன் ஏற்பாடுகளை தயார் செய்து வருகிறார்கள்.
மேலும் இணையதளத்தில் உள்ள பதிவுகள்
பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை
The new eight planets in tamil
NASA's future moon missions in tamil
நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது
The James Webb Space Telescope can detect the universe in tamil
0 Comments