Asteroid Apophis 99942 is an asteroid that will pass close to Earth in tamil
பூமிக்கு அருகில் கடந்து செல்ல இருக்கும் சிறுகோள் அப்போபிஸ் 99942 சிறு கோள்
விண்வெளியில் ஏராளமான சிறுகோள்கள் உள்ளது அப்போது சிறு கோள்கள் மற்றும் விண்கற்களும் எங்கள் பூமிக்கு அருகில் கடந்து செல்வது உண்டு ஏன் சிலவேளைகளில் விண்கற்களும் பூமிக்குள் வந்து விழுந்ததும் உண்டு ஆனால் அவை அனைத்தும் பூமியில் இருக்கும் வளிமண்டலத்தில் எரியூட்ட படுகிறது என்பதால் பாதிப்புகள் ஏதும் இல்லாமல் பூமி பாதுகாப்பாக இருந்து வருகிறது. அதிலும் பெரும்பாலான விண்கற்களை வியாழன் கோள் தன்பக்கம் இழுத்துக் கொள்வதால் பூமிக்கு பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுவது குறைந்து கொண்டு வருகிறது வியாழன் கோள் மட்டும் இல்லை என்றால் பூமியின் நிலை சொல்ல முடியாத நிலைக்கு மாறிவிடும். இருந்த போதும் பூமிக்கு ஒரு பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு சிறு கொண்டு விரைந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த சிறு கோள் தான் அப்போபிஸ் 99942 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சிறுகோள் 2029 ஆம் ஆண்டளவில் எங்கள் பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
![]() |
Apophis 99942 is சிறு கோள் பூமியை கடந்து செல்லும் மாதிரி காட்சிகள் (படம் கடன் நாசா) |
இந்த சிறு கோள் பூமியை தாக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதையும் அறிவித்த போதும் இந்த சிறுகோள் பூமியை சுற்றி இருக்கும் செயற்கைக்கோளின் தூரத்தில் தான் கடக்க போவதாக தெரிவித்துள்ளார்கள் அதாவது இந்த அப்போபிஸ் 99942 சிறுகோள் பூமியிலிருந்து 31900 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல உள்ளதாகவும் இது கிட்டத்தட்ட எங்களுடைய பூமியிலிருந்து செயற்கைக்கோள்கள் நிறுத்தப்படும் இடங்களை கொண்டதாக இருப்பதால் ஒருவேளை பூமிக்குள் இந்த அப்போபிஸ் 99942 சிறுகோள் பூமிக்குள் வந்து விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது ஏனென்றால் பூமியின் ஈர்ப்பு விசையால் இந்த சிறுகோள்ளை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் பூமிக்குள் விழுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தும்.
அப்போபிஸ் 99942 அளவு
இந்த சிறுகோள் ஆனது 1100 அடி நீலத்தை கொண்டிருப்பதாகவும் இந்த சிறு கோள் மட்டும் பூமிக்குள் வந்து விழுந்தாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தும் அதாவது 3 தொடக்கம் 10 வரையிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் அதாவது 750 மெகா டன் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய அளவு இதனுடைய பாதிப்புகள் இருக்கும். இதேபோன்று மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியில் விழுந்து உள்ளது 1908 ஆண்டளவில் ரஷ்யாவில் விழுந்துள்ளது. இந்த விண்கல்லின் அகலம் மட்டும் 620 அடி காலத்தைக் கொண்ட இந்த விண்கல் பாரிய சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் இவை அனைத்தும் மாபெரும் சேதம் அல்ல இதற்கு முன்பு பூமியில் மாபெரும் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும் விண் கல் ஒன்று விழுந்துள்ளது இந்த விண்கல் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் விழுந்துள்ளது இந்த விண்கல்லின் அளவு 81 கிலோமீட்டர் விட்டத்தை கொண்ட மாபெரும் வின்கல் ஆகும் இந்த விண்கல் விழுந்த போது தான் டைனோசர் என்ற இனம் அழிந்து போயிருக்க கூடும் என்று ஆய்வாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இருந்தா போதும் 2029 ஆம் ஆண்டளவில் பூமிக்கு அருகில் கடந்து போக இருக்கும் அப்போபிஸ் 99942 சிறுகோள் எங்கள் பூமியில் வந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லாத போதும் அதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக விஞ்ஞானத்தின் தொழில்நுட்பங்களை கொண்டு பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியமான விடயமாக உள்ளது.
அப்போபிஸ் 99942 கண்காணிப்பு நடவடிக்கைகள்
2004 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது அப்போபிஸ் 99942 கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுகோள் எங்கள் பூமியை எப்போது தாக்க வரப்போகிறது அதனுடைய நிலை எப்படி இருக்கிறது எல்லாவற்றையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் இதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மாபெரும் reader antenna மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த சிறு கோள் சரியாக 2029 ஏப்ரல் 13 ஆம் திகதி அளவில் எங்கள் பூமியின் அருகில் கடந்து செல்ல உள்ளதாகவும் இதை வெறும் கண்களாலும் பார்க்க முடியும் என்பதையும் அறிவித்துள்ளார்கள். இது நடக்கும் இடமானது அவுஸ்திரேலியா தொடக்கம் இந்தியா பெருங்கடல் வழியாக கடந்து செல்ல உள்ளதாகவும் ஆய்வாளர்களின் கணித்துள்ளார்கள். இருந்தாலும் பூமியின் ஈர்ப்பு சக்தியை அதிகமாக இருப்பதால் ஒருவேளை பூமிக்குள் விழுந்துவிட்டால் மாபெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்பதற்காக இந்த சிறுகோள்ளை திசை மாற்றுவதற்கான கால அவகாசம் நிறைய இருப்பதால் மாபெரும் ராக்கெட் ஒன்றை தயார் செய்து அதன் மீது மோத விட்டு அதன் பாதையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கப்பட உள்ளதாகவும் அல்லது அந்த சிறு கோள் மீது விண்கலம் ஒன்றை செலுத்தி பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தி அதன் பாதையை திசை திருப்புவது மூலமாக பூமிக்கு வர இருக்கும் பாதிப்புகளை தடுப்பதற்கான அதிக காலங்களும் இருப்பதால் விஞ்ஞானத் துறையில் இவ்வாறான முயற்சிகளை எடுக்க முடியும் ஏனென்றால் தொழில்நுட்பங்களின் அதிக வசதிகள் இப்போது இருந்து வருவதால் இவை அனைத்தும் ஒரு சாதாரண விடயமாக தான் இப்போதைய கால கட்டத்தில் இருந்து வருகிறது.
மனிதனின் அறிவாற்றலால் மூலமாகதான் விண்வெளியிலிருந்து இவ்வளவு பாதுகாப்பாக எங்களால் இருக்க முடியும் மனிதனுடைய இந்த தொழில்நுட்ப அறிவாற்றல் இல்லை என்றால் விண்வெளியில் வரும் ஆபத்துக்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறது எப்போது வரப்போகிறது என்பதை அறியாமல் பல இழப்புகளை சந்திக்க நேரிடும் இதனால் காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களும் அவசியமாக தேவைப்படுவதை இவ்வாறான நிகழ்வுகள் அனைத்தும் உணர்த்துகின்றது. இந்த அப்போபிஸ் 99942 சிறு கோள் பூமியில் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் கடந்து சென்று விட்டாள் மீண்டும் 2036 ஆண்டளவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இயற்கைக்கு முன் மனிதனின் தொழில்நுட்பம் எவ்வளவு தூரத்துக்கு பயன்தரும் என்று பார்ப்போம்.
விண்வெளியின் பெரும் ஆபத்துகள் இருந்தாலும் மனிதனும் பூமியை ஒரு பகுதியிலிருந்து அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆம் இயற்கையான காடுகள் அளிப்பதோடு அதனால் ஏற்படும் அதிகமான வெப்பத்தால் பூமி மிகவும் பாதிப்படைவதால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வதால் மாபெரும் சுனாமி ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளையும் மனிதனே ஏற்படுத்திக் கொள்கிறான்.
இந்த தகவல் மூலமாக விண்வெளி நிகழ்வுகளையும் மனிதனுடைய தொழில்நுட்பங்களையும் மனிதனுடைய அறிவாற்றலையும் அறிந்து கொண்டிருப்பீர்கள் தொடர்ந்து எங்கள் இணையதளத்துடன் இணைந்திருங்கள் விண்வெளி தகவல் அனைத்தையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இணையதளத்தில் உள்ள பதிவுகள்
பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை
The new eight planets in tamil
NASA's future moon missions in tamil
நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது
The James Webb Space Telescope can detect the universe in tamil
0 Comments