பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லும் சிறுகோள் 2008GO20

 பூமியைக் கடந்து செல்ல இருக்கும்  சிறுகோள்   


2008GO20 சிறுகோள் ஜீன் 24 2021 பூமியை கடக்க போவதாக
 நாசா அறிவித்துள்ளது

 
பூமிக்கு அருகாமையில் சிறுகோள்   ஒன்று கடந்து செல்ல இருப்பதாக நாசா கண்காணித்து தெரிவித்துள்ளார்கள். இந்த சிறுகோள்  உண்மையாகவே எங்கள் பூமியை வந்து பாதிப்பை ஏற்படுத்துமா..? அல்லது பூமியை கடந்து சென்று விடுமா என்ற கேள்வி பலர் மத்தியில் நிலவி வரும் வேளையில் நாசாவின் கணிப்பின்படி இப்போது பூமியை நோக்கி விரைந்து வந்து கொண்டு இருக்கும் சிறுகோள் ஆனது 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. Ads

பூமிக்கு அருகாமையில்   கடந்துசெல்ல போக இருக்கும் 2008GO20 சிறுகோள் உண்மையாகவே  பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லாது அதாவது நிலவுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரம் 384,403 கிலோமீட்டர் இந்த தூரத்தை 8 மடங்காக பாருங்கள் அந்த அளவு தூரத்தில்தான் பூமியைக் கடந்து செல்லப் போகிறது இந்த சிறுகோள் இதனால் பூமிக்கு எந்த விதமான ஆபத்துக்களும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை நாசா அறிவித்துள்ளது.

இப்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் 2008GO20 சிறுகோள் இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு அளவில் பூமியை கடந்து சென்றுள்ளது. இப்போது மீண்டும் 2021 ஜூலை மாதம் 24ஆம் திகதி கடந்து செல்லப் போகிறது. 2008GO20 சிறுகோளின் விட்டமானது 220 மீட்டர் இது ஒரு விளையாட்டு மைதானத்தின் அளவை கொண்டு இருக்கும் என்று நாசா தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த சிறுகோள் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறது அதாவது இந்த சிறுகோளில் அதிகமான பணி ஐஸ்கட்டிகள் இருப்பதாகவும் இதனால் இதில் தண்ணீர் இருக்கக்கூடும் என்றும் அப்படி இதில் தண்ணீர் இருந்தால் எங்கள் பூமியில் இருக்கும் தண்ணீரை விட பல ட்ரில்லியன் லிட்டர் அளவுக்கான தண்ணீரை இந்த சிறுகோள் கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


விண்வெளியில் வால் நட்சத்திரம் தோன்றும் காட்சி

இவ்வாறான  பணி ஐஸ்கட்டிகளை கொண்டிருக்கும்  சிறுகோள் தான் வால் நட்சத்திரங்கள் போல் வானில் தோற்றமளிக்கும். நீங்கள் விண்வெளியில் வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருப்பீர்கள். எவ்வாறு வால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றது வால் நட்சத்திரங்களுக்கு வால் என்ற பகுதி எவ்வாறாக தோன்றுகின்றது இதற்கான காரணம்என்னவென்றால் அதிவேகமாக ஒரு விண்கல் அல்லது சிறுகோள் மிக அதிவேகமாக விண்வெளியில் வந்து கொண்டிருக்கும்போது அதிகமாக பணி ஐஸ் கட்டிகள் சிறு கோளிலிருந்து அதிகமான வெப்பத்தால் நீராக மாறி வெளியேறும்போது சூரிய ஒளியின் பிரதிபலிப்பே வால் நட்சத்திரமாக தோற்றமளிக்கிறது.

2008GO20 சிறுகோள் பூமியிலிருந்து 287 கோடி கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பூமியை நோக்கி பறந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த சிறுகோள் பூமியை கடக்கும் போது ஒரு நொடிக்கு 8 தொடக்கம் 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லக் கூடும் என்று நாசா தெரிவித்துள்ளார்கள். மீண்டும் இந்த சிறு கோள் எங்கள் பூமிக்கு அருகில் 2034 ஆண்டளவில் வருவதற்கான அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் நாசா தெரிவித்து வருகிறது.

இதேபோன்று சிறுகோள் 1998-ஆம் ஆண்டளவில் எங்கள் பூமியை 31 ஆயிரத்து 320 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றுள்ளது. இவ்வாறாக விண்வெளியில் எங்கள் பூமிக்கு அருகில் வரும் சிறு கோள்களை மிகவும் ஆபத்தான பொருட்களாக விண்வெளி ஆய்வாளர்கள் கணித்து வருகிறார்கள். இதேபோன்று .ஏராளமாக விண்வெளியில் சிறு கோள்களும் சிறு பாறைகளும் உலாவி கொண்டு வருகிறது. இதில் ஏதாவது ஒன்று இரண்டு மாத்திரம் தான் எங்கள் பூமியின் பக்கம் வந்து செல்கிறது ஏனையவற்றை வியாழன் கோள் தன்பக்கம் எடுத்துக்கொள்வதால் பெரும்பாலான விண்கற்கள் வியாழன் கோளில் விழுந்து விடுகிறது. இதனால் பூமிக்கு பெரும் ஆபத்துக்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. உண்மையில் வியாழன் கோள் மாத்திரம் இல்லை என்றால் எங்கள் பூமியின் நிலையை எண்ணிப் பார்க்க முடியாது எந்த நேரத்திலும் விண்கற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும். இதனால் பெரும் ஆபத்தை பூமி சந்திக்க நேரிடும் இருந்தபோதும் பூமியில் இருக்கும் வளிமண்டலத்தின் அடர்த்தியின் காரணமாக பெரும்பாலான விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் வரும்போதே எரிந்து சாம்பலாகிவிடும்.

2008GO20 சிறுகோள் எங்கள் பூமிக்கு எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் அதிக தொலைவில் கடந்து செல்ல இருப்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை என்று நாசா தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மீண்டும் இந்த சிறுகோள் எங்கள் பூமியை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் எதிர்காலத்தில் வர இருக்கும் இந்த சிறுகோள் ஏவ்வாறாக எங்கள் பூமியின் அருகில் வர இருக்கிறது என்பதை தொடர்ந்து நாசா கண்காணித்து வருகிறது. ஆனால் அந்த சிறுகோள் எங்கள் பூமிக்கு அருகில் வந்தாலும் பூமிக்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படாமல் பூமியை கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்து வருகிறார்கள்.

பூமியை நோக்கி  வந்து கொண்டிருக்கும் சிறு கோள்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பதை எண்ணும்போது விண்வெளித்துறையில் இவ்வளவு முன்னேற்றங்களை அடைந்து உள்ளோம் என்பதை நாங்கள் அனைவரும் உண்மையில் பெருமிதம் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

 விண்வெளித்துறையில் இவ்வாறான நவீன தொழில்நுட்பங்களை கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இருந்தால் இவ்வாறான சிறுகோள்கள் பூமியை வந்து தாக்கும் வரை யாருக்கும் தெரியாமல் தான் இருக்கும். என்பதால் மனித இனத்துக்கு விண்வெளி தொழில் நுட்பங்கள் மிக அவசியம் என்பதை இவ்வாறான சிறு கோள்களின் வருகை புரிய வைக்கின்றது.

இந்த பதிவின் மூலம் விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் இதேபோன்று தொடர்ந்து புதிய தகவல்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்து கொண்டே இருங்கள் புதிய தகவல்கள் அனைத்தையும் தவறாமல் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் எங்கள் இணையதளத்தில் உள்ள பதிவுகளை உங்கள் பார்வைக்கு

சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் சுற்றும் வேகம்

பூமியை நோக்கி வரும் இரண்டாவது சூரியன்

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுகள்

பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை

The new eight planets in tamil 

NASA's future moon missions in tamil

நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது

The James Webb Space Telescope can detect the universe in tamil

OSIRIS-REx spacecraft is speeding to Earth in tamil

The largest universe in space

Jupiter's Callisto Moon Salt Sea

NASA discovers planet without sun

 


Post a Comment

0 Comments