நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது

 நட்சத்திரங்கள் எப்படி உருவாகிறது

இரவு வேளைகளில் வானத்தை பார்க்கும் போது கண்ணை கவரும் அளவுக்கு மிகவும் அற்புதமாக நட்சத்திரங்கள் தெரியும் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது என்பதை பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா ஏன் எங்களுடைய சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் அப்போ நீங்க நினைக்கலாம் சூரியனும் நட்சத்திரம் என்றால் வானத்தில் தெரியும் ஏனைய நட்சத்திரங்களும் சூரியனைப் போல் மிக பிரகாசமாக இருக்க வேண்டுமல்லவா என்று உண்மைதான் ஆனால் விண்வெளி என்பது மிகவும் பரந்து கிடக்கும் மாபெரும் அண்டவெளி ஆகும் இதில் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது இதனால் தான் அந்த நட்சத்திரங்கள் அனைத்தும் எங்கள் கண்களுக்கு மிகவும் சிறியதாக தெரிகிறது.

வானத்தில் தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் நீங்கள் பார்க்கும்போது மின்னுவது போல் தோன்றும் ஆனால் உண்மையில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் மின்னுவதில்லை ஆனால் மின்னுகிறதே அது எப்படி என்றால் பூமியை சுற்றியுள்ள வளி மண்டலங்கள் தான் இதற்கு காரணம் இது எப்படி நிகழ்கிறது என்றால் நட்சத்திரங்களின் ஒளியானது எங்கள் பூமியை வந்தடையும் போது பூமியில் இருக்கும் வளிமண்டலத்தில் படும்போது ஒளித்தெறிப்பு நடக்கின்றது இதனால் நட்சத்திரங்கள் அனைத்தும் மின்னுவது என்பது போல் எங்கள் கண்களுக்குத் தோன்றும் இந்த பூமியின் வளிமண்டலம் மட்டும் நட்சத்திரத்தின் ஒளியை வழி மறைக்காமல் விட்டாள் நிச்சயமாக நட்சத்திரங்களிலிருந்து வரும் அதி மோசமான கதிர்வீச்சுகள் எங்களை நிச்சயமாக தாக்கும் இதனால் பாரிய மோசமான விளைவுகளை ஏற்படும்.

நட்சத்திரங்கள் எல்லாம் எங்கே எப்படி உருவாகிறது என்றால் அதற்கும் ஒரு தொழிற்சாலை உண்டு என்ன நட்சத்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலை என்று ஆச்சரியப் படுகிறீர்களா அந்த தொழிற்சாலை தான் நெபுலா என்று சொல்வார்கள் இந்த நெபுலா மூலம்தான் நட்சத்திரங்கள் அனைத்தும் உருவாகிறது. சாரி நெபுலா என்றால் என்ன இந்த நெபுலாக்கள் எல்லாம் எங்கு உள்ளது என்பதை பற்றியும் பார்ப்போம் வாருங்கள்.

ஓரியன் நெபுலா

இந்த விழாக்களில் மிகவும் அருகாமையில் இருப்பது ஓரியன் நெபுலா இந்த ஓரியன் நெபுலா எங்கள் பூமியிலிருந்து 1340 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது இந்த ஓரியன் நெபுலாவை  நீங்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் அதாவது கண் பார்வை மிகவும் தெளிவாக இருக்கும் ஒரு நபர் வானில் இருணட பகுதியாக இருக்கும்போது வானில் தெளிவாகத் தெரியும் இந்த ஓரியன் நெபுலா ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் வெளிச்சங்கள் ஏதும் இல்லாத பகுதியில் சென்று பார்த்தீர்கள் என்றால் இந்த ஓரியன் நெபுலாவை நீங்கள் பார்க்கலாம்.


குதிரைத் தலை நெபுலா

அடுத்தது எங்கள் பூமியிலிருந்து 1500 ஒளி ஆண்டுகள் செல்ல வேண்டும் ஆம் அவ்வளவு தூரத்தில் இருப்பது தான் குதிரைத் தலை நெபுலா இது மிகவும் இருட்டாக இருக்கிறது இதனால் அங்கிருந்து நட்சத்திரங்கள் ஒன்றும் அதிகமாக தெரிய வாய்ப்புகள் குறைவாக உள்ளது இதன் விட்டம் 7 தொடக்கம் 13 ஒளியாண்டுகள் வரை உள்ளது இதில் அதிகமாக ஹைட்ரஜன் கேஸ் வாயுக்கள் அதிகமாக உள்ளது.

பபுள் நெபுலா

அடுத்த நெபுலா பூமியிலிருந்து 11 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் நெபுலா ஆனது பபுள்ஸ் நெபுலா இந்த நெபுலாவின் விட்ட மட்டும் 10 ஒளி ஆண்டுகள் இந்த நெபுலா மிகவும் பிரகாசமாக இருக்கும் பார்ப்பதற்கே கண்களை கவரும் வகையில் மிகவும் அழகாகவும் இருக்கும் இதில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உருவாகி இருப்பதை இந்த படத்தை பார்க்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் இதனுடைய அழகும் இதில் எவ்வளவு நட்சத்திரங்கள் உருவாகி உள்ளதையும்.

இந்த நெபுலாவில் தான் நட்சத்திரங்கள் உருவாகிறது நெபுலாவில் இருக்கும் தூசிகள் ஒன்றுடன் ஒன்று உராயும்போது ஏற்படும் தாக்கத்தினால் தான் உருவாகிறது நட்சத்திரங்கள் இதில் தூசிகள் என்பது சாதாரணமான தூசிகள் அல்ல அதாவது விண்வெளியில் இருக்கும் மாபெரும் பாறைகள் இந்த பாறைகள் அனைத்தும் தான் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹைட்ரஜன் ஹீலியம் ஆகியவை ஒன்று இணைந்து மாபெரும் சக்தியாக வெளிப்படும் போது தான் நட்சத்திரங்கள் உருவாகிறது இவை அனைத்தும் உருவாகுவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி 50 லட்சம் ஆண்டுகள் ஆகும் இதன்பின் அடுத்த கட்டமாக prto star என்ற நிலையை அடையும் இதில்தான் அணுக்கரு உற்பத்திகள் ஆகும் இப்படி உற்பத்தியாகும் நட்சத்திரங்கள் அதனுடைய நிறையை பொறுத்துதான் அதனுடைய வாழ்நாள்களை தீர்மானிக்கமுடியும் எமது சூரியனை போல் நிறையை கொண்டு இருந்தாள் இந்த நட்சத்திரங்களும் தங்களுக்கென ஒரு சூரிய குடும்பத்தை உருவாக்கிக் கொள்ளும்.

நட்சத்திரங்களின் கடைசி நாள் எப்படி இருக்கும்

எந்தப் பொருளுக்கும் அல்லது எந்த மனிதராக இருந்தாலும் அதற்கென்று ஒரு முடிவு காலம் உண்டு நிச்சயம் உண்டு இந்த வகையில் விண்வெளியில் இருக்கும் நட்சத்திரங்களும் விதிவிலக்கல்ல இந்த நட்சத்திரங்களுக்கும் முடிவு காலம் என்பது உண்டு ஆம் ஒரு நட்சத்திரத்தின் முடிவு காலம் என்பது தனக்குள் இருக்கும் எரிவாய் வான ஹீலியம் அனைத்தும் எரித்து முடித்த பின்பு தனது வாழ்நாளை முடித்துக்கொள்ளும் அதாவது சூப்பர் நோவாவாக வெடிக்கும் சூப்பர் நோவாவாக வெடித்த பின்பு கருந்துளை ஆகவும் மாறுவதற்கு அதிகமான வாய்ப்புகளும் உண்டு அல்லது வெடித்த பின்பு இந்த நெபுலாவாகவும் ஆகவும் மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு இப்படி மாறியதும் மீண்டும் ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவதற்கான வேலைப்பாடுகள் ஆரம்பமாகும் பார்க்கப்போனால் விண்ணிலும் மீள் சுழற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது சரி இந்த விண்ணில் எப்படி இந்த பாறைகள் அனைத்தும் இருக்கிறது எப்படி வந்தது என்றே பார்க்கப்போனால் அதற்கான விடை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் உண்மையான விடயம் ஏனென்றால் விண்வெளி எங்கே தொடங்குகிறது எங்கே முடிகிறது என்பதை இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை இதற்காகத்தான் இப்போது புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வேப் விண்வெளி தொலைநோக்கி இதற்கான பதிலை ஓரளவு தரும் என்று நம்புகின்றோம்

இந்த பதிவின் மூலம் விண்வெளியில் எப்படி நட்சத்திரங்கள் உருவாகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இதேபோன்று விண்வெளி தகவல்கள் அனைத்தையும் எங்கள் இணையதளத்தில் நீங்கள் அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்திருங்கள் விண்வெளியில் நடக்கும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் எங்கள் இணையதளத்தில் நீங்கள் பார்க்கலாம். 


Post a Comment

0 Comments