செவ்வாய் கிரகத்தின் ஆய்வுகள்

 செவ்வாய் கிரகத்தின் சிறப்புகள்


Mars
எமது பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் செவ்வாய் கிரகம் ஆகும் இந்த செவ்வாய் கிரகமும் எங்கள் பூமியை போன்று தான் சூரிய குடும்பத்தை சுற்றி வருகிறது இதனால் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது என்பதற்காக செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறார்கள். உண்மையில் செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும் அதனுடைய சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

செவ்வாய் கிரகம் எங்கள் பூமியை போல் இருந்தாலும் ஆனால் ஆறு மடங்கு சிறியதாக தான் உள்ளது. அதாவது சூரிய குடும்பத்தின் முதலாவதாக இருக்கும் புதன் கோளுக்கு அடுத்ததாக செவ்வாய் கிரகம் உள்ளது. செவ்வாய் கிரகம் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது இந்த சிவப்பு நிறம் எப்படி செவ்வாய் கிரகத்திற்கு வந்திருக்கும் அதுமட்டுமல்லாமல் அங்கு துரு பிடித்த மாதிரி இருப்பதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கப்போனால் விஞ்ஞானிகளுக்கு சரியான சவாலாக இருந்தது இந்த விடயம் ஏனென்றால் அங்கு ஒட்சிசனின் அதிகமாக இல்லை துரு பிடிப்பதற்கு காபனீரொட்சைட் உடன் ஆக்சிஜன் இணைந்து இருக்க வேண்டும் அப்போதுதான் துருப்பிடிக்கும் நிகழ்வு ஏற்படும் ஆனால் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து இருக்கும்போது எப்படி செவ்வாய் கிரகத்தில் துரு பிடித்தது போல் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடும் என்பதை விஞ்ஞானிகள் பல குழப்பத்தில் இருந்த போது இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள் அதாவது செவ்வாய் கிரகத்தில் 4 பில்லியன் முன்பு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும் அங்கு அதிகமான வளி மண்டலங்களும் இருந்திருக்கவேண்டும் காலப்போக்கில் இயற்கையின் அனர்த்தத்தால் அங்குள்ள தண்ணீர் அனைத்தும் ஆவியாகி போயிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இதனால்தான் செவ்வாய்க்கிரகத்தில் துரு பிடித்தது போல் சிவப்பு நிறத்தில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் எங்கள் பூமியை விட 40 நிமிடம் தான் அதிகம் அதாவது எங்கள் பூமியில் 24 மணித்தியாலம் என்றால் செவ்வாய் கிரகத்தில் 24 மணித்தியாலமும் 40 நிமிடம் அதிகமாகவும் உள்ளது. செவ்வாய் கிரகமும் எங்கள் பூமியை போல் சார்ந்துதான் இருக்கிறது அதாவது எங்கள் பெருமை 23 பாகை சாய்வில் இருப்பது போல் செவ்வாய் கிரகமும் 25 பாகை சாய்ந்து தான் இருக்கிறது. ஆனால் செவ்வாய் கிரகத்தில் புவியீர்ப்பு என்பது கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது அதாவது நீங்கள் பூமியில் 100 கிலோ எடையுடன் இருந்தால் செவ்வாய் கிரகத்தில் 40 கிலோ மாத்திரம்தான் இருப்பீர்கள்.


செவ்வாய் கிரகத்தின் ஏரிகள் இருந்ததற்கான அடையாளங்கள்

செவ்வாய் கிரகத்தை முதல் முதலில் தொலைநோக்கி மூலமாக கண்டுபிடித்தவர் கலிலியோ 1610 ஆம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்தை கண்டுபிடித்தார் அதைத்தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை 1977 ஆம் ஆண்டளவில் Ginvanni SChianarelli என்ற விண்வெளி ஆய்வாளர் செவ்வாய் கிரகத்தை கண்டுபிடிக்கும் போது அங்கு பள்ளங்களும் ஏரிகள் போல் இருப்பதாகவும் தெரிவித்தார் அதாவது அங்கு நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இதனால் அங்கு உயிரினங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார் எமது பூமியிலும் முதல் உயிரினம் தோன்றியது நீரில் தான் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தபடியால் அதேபோன்று செவ்வாய் கிரகத்திலும் ஏதாவது உயிரினம் இருக்கும்போது செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்ற கேள்வி அவரின் கண்டுபிடிப்பில் உருவாகத் தொடங்கியது. இதை அடுத்து இதை முழுமையாக ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் மரினா 4 என்ற விண்கலம் 1965ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டது இந்த விண்கலம் தான் முதல் தடவையாக செவ்வாய் கிரகத்தை சென்ற விண்கலம் ஆகும். இது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மட்டும்தான் செல்ல முடிந்தது அங்கு சென்று முதல் தடவையாக செவ்வாய் கிரகத்தை மிக வெற்றிகரமாக படம் பிடித்து அனுப்பியது ஆனால் அந்தப் படத்தை பார்த்தால் Ginvanni SChianarelli கூறியதுபோல் ஏரிகள் இருந்ததற்கான பள்ளங்கள் உள்ளது ஆனால் அவை அனைத்தும் வறண்ட பாலைவனம் போல் தான் இருந்தது. இதனால் அங்கு உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதியானது. ஆனால் ஒரு சந்தேகம் தோன்றியது அது என்னவென்றால் எப்படி இந்த பள்ளங்கள் தோன்றியிருக்கலாம் என்ற சந்தேகம் தான் இப்படி பள்ளங்கள் இருந்ததால் நிச்சயமாக ஒரு காலத்தில் இங்கு பல ஏரிகள் இருந்த இருக்கக்கூடும் ஆகையினால் அங்கு நீர் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் என்பதற்காக தொடர்ந்து நாசாவும் உட்பட பல விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களும் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்காக பல ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். 


செவ்வாய் கிரகத்தின் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள்

இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவப் பகுதியில் மாத்திரம் பனிப்பாறைகள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளார்கள் இப்படி பனிப்பாறைகள் இருப்பதால் நிச்சயமாக தண்ணீரும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதற்காக தொடர்ந்து ஆராய்ச்சிகளும் மேற்கொண்டு வருகிறார்கள் அந்த வகையில்தான் இப்போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்காக மாஸ் 2020 என்ற ரோவர் ஒன்றை நாசா வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ளது. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஏரிகள் போல் தோற்றம் உள்ள இடத்தில் தண்ணீர் இருந்ததா என்பதை ஆய்வு செய்ய தொடங்கும் அதுமட்டுமல்லாமல் அங்கு ஏதாவது உயிரினம் வாழ்ந்த உள்ளதா என்பதை பற்றியும் ஆய்வு செய்ய தொடங்க உள்ளது. அத்துடன் காபன் ஆக்சைடை ஆக்சிசன் ஆக மாற்றுவதற்கான ஆய்வுகளையும் செய்யும் திறன் கொண்ட அளவுக்கு மாஸ் 2020 என்ற ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். பார்ப்போம் இந்த மாஸ் 2020 ரோவர் சரியாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து நல்ல தகவல்களை வெளிவந்தால் மனிதனின் கண்டுபிடிப்பில் மாபெரும் வெற்றியாக தான் இது இருக்கும். அது மட்டுமல்ல செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை எதிர்காலத்தில் குடியமர்த்துவதற்கு இந்த ஆய்வு பெரும் உதவியாக இருந்து வரும். 


செவ்வாய் கிரகத்தில் மாஸ் 2020 ரோவர்

செவ்வாய்கிரகத்தில் மாஸ் 2020 ரோவர் மாத்திரமல்ல கியூரியாசிட்டி உட்பட 7 ரோவர்கள் செவ்வாய் கிரகத்தை பற்றி தகவல்களை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கு அனுப்பி கொண்டு இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தின் வெப்பமும் பருவமாற்றம் எவ்வாறு  இருக்கும்

செவ்வாய் கிரகத்தில் எங்கள் பூமியை போல் பருவ மாற்றங்களும் உண்டு அதாவது வெயில் காலம் குளிர் காலம் என்ற பருவ மாற்றங்களும் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் அதிக வெப்பமாக -27 தொடக்கம் 127 வரை இருப்பதோடு சூரியனிலிருந்து அதிகமாக தூரத்தில் உள்ளதால் சராசரியாக 48 டிகிரி வரை வெப்பநிலை உள்ளது.

செவ்வாய்க்கிரகத்தின் புயல்

பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் புயல்கள் வருவதுண்டு எங்கள் பூமியில் புயல் வருவது என்றால் இடியுடன் மழையுடன் பலத்த காற்றுடன் வரும் கடலின் மட்டம் உயர்வடைவதால் பல இயற்கை அனர்த்தங்களும் ஏற்படும் பூமியில் புயலின் வேகம் ஆனது 300 கிலோ மீட்டர் வரை இருக்கும் ஆனால் செவ்வாய் கிரகத்தில் வெறும் மணல் புயல் மாத்திரம்தான் வரும் இந்த ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் புயலானது கிட்டத்தட்ட ஆறு மாதம் தொடக்கம் 8 மாதம் வரை தொடர்ந்து நீடிக்கும் 

செவ்வாய் கிரகத்தின் நிலவுகள்


செவ்வாய் கிரகமும் செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலவு
ஏடய்மோசு


போபோசு

செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலவுகள் உள்ளது போபோசு,ஏடய்மோசு என்ற இரண்டு நிலவுகள் உள்ளது இதில் செவ்வாய் கிரகத்தில் மிக அருகாமையில் சுற்றிவருவது போபோசு நிலவாகும் ஆனால் இந்த நிலவுகள் அனைத்தும் கோள வடிவத்தில் இல்லை அதாவது பூமியில் இருக்கும் நிலவைப்போல் கோள வடிவில் இல்லை விண்வெளி இருக்கும் பாறைகள் போல் தான் இந்த நிலவு களும் உள்ளது. இதில் போபோசு நிலவானது இன்னும் 500 பில்லியன் வருடங்களுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள் என்ன அவ்வளவு காலம் நாங்கள் நிச்சயமாக இருக்க மாட்டோம். எங்களுடைய எதிர்கால சந்ததிகள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதற்குள் விண்வெளியில் எவ்வளவு மாற்றங்களும் தொழில்நுட்பங்களும் நிச்சயமாக வந்துவிடும் இப்போது நாங்கள் விண்வெளியில் பல மாற்றங்களையும் அதிக தொழில்நுட்பங்களையும் கடந்து வந்துவிட்டோம்.


செவ்வாய் கிரகத்தில் குடியமர்த்துவதற்கு ஆன மாதிரி காட்சிகளை பூமியில் உருவாக்கிய வடிவமைப்புக்கள்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த முடியுமா அது சாத்தியம் ஆகுமா மற்றும் செவ்வாய் கிரகத்தில் பல ஆராய்ச்சிகளை  நாடுகள் இன்னும் செயல்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கு எவ்வாறு ஆயுதங்களை செய்து வருகிறார்கள் அதற்கான தொழில்நுட்பங்கள் இவ்வாறு தயாரித்து வருகிறார்கள் என்பவற்றையெல்லாம் தொடர்ந்து எங்கள் இணையதளத்தில் நாங்கள் பதிவு செய்ய உள்ளோம் செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சிகள் மனிதனின் மாபெரும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும் இப்போது அனுப்பப்பட்டுள்ள மாஸ் 2020 ரோவர் உடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள ஹெலிகாப்டர் ஒன்று மாபெரும் வெற்றியாக செவ்வாய் கிரகத்தில் பரந்து உள்ளது.


செவ்வாய்கிரகத்தில் பரந்த புத்தி கூர்மை ஹெளிகாப்டர்

 இதுவே ஒரு வேற்று கிரகத்தில் முதல்தடவையாக பரந்த ஒரு விமானம் ஆகும். இதுவே மனிதனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக உள்ளது. அதுவும் ஒரு சிறிய ரக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கி அதே செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறக்கவும் செய்ய வைத்துள்ளார்கள் இதனால் எதிர்காலத்தில் பல விண்வெளி ஓடங்களை செவ்வாய் கிரகத்தின் பறக்க விடுவதற்கான இது ஒரு அடிப்படையாக அமைந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை பற்றி தொடர்ந்து பல தகவல்களை இந்த இணையதளத்தில் நாங்கள் பதிவு செய்வோம். தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்து செவ்வாய் கிரகத்தை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்

Post a Comment

0 Comments