சூரிய குடும்பத்தில் மிகவும் வித்தியாசமானது யுரேனஸ் கிரகம்
எமது சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அனைத்தும் ஒவ்வொரு வித்தியாசத்தில் இருந்து வருகிறது அதிலும் மிகவும் வித்தியாசத்தில் உள்ளது யுரேனஸ் கிரகம் சூரிய குடும்பத்திலேயே மிகவும் குளிரான கிரகம் என்றால் யுரேனஸ் கிரகம் தான்.சூரியக்குடும்பத்தில் ஏழாவது இடத்தில் இருப்பது தான் யுரேனஸ் கிரகம் சூரிய குடும்பத்தில் முதல் தடவையாக தொலைநோக்கி மூலமாக கண்டுபிடித்தது யுரேனஸ் கிரகம்தான் ஆம் இந்த கிரகத்தை 1781 ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்ஷல் என்பவர்தான் முதல்தடவையாக தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார் இந்த கிரகத்தை கண்டுபிடித்தது இதற்கு இவர் வைத்தது முதல் பெயர் என்னவென்றால் ஜார்ஜியம் ஸிட்டுஸ் பெயரை வைத்தார் ஆனால் இந்த சூரிய குடும்பத்திற்கு பொருத்தமற்றதாக இல்லை என்பதால் ஜோஹான் ஏட்ரட்போட் கிரேக்க கடவுளான ஊரநோஸ் என்ற பெயரை லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு யுரேனஸ் என்று வைக்கப்பட்டது.
![]() |
யுரேனஸ் கிரகம் |
யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 290 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தில் 20 மடங்கு தூரத்தில் உள்ளது. யுரேனஸ் கிரகம் 50 ஆயிரம் கிலோ மீட்டர் விட்டத்தை கொண்டுள்ளது. யுரேனஸ் கிரகம் சூரியனை சுற்றி வருவதற்கு 84 வருடங்கள் ஆகும் இதுவரைக்கும் யுரேனஸ் கிரகம் இரண்டு பிறந்த நாளை கொண்டாடி விட்டது ஆம் 1781 தொடக்கம் 1865 மற்றும் 1949 இனி தன்னுடைய மூன்றாவது பிறந்தநாள் 2033 தான் வரும். யுரேனஸ் கிரகம் தன்னைத்தானே 17 மணி நேரத்துக்குள் சுற்றி முடித்து விடும் யுரேனஸ் கிரகத்திற்கு சூரியனில் இருந்து ஒளியானது வந்தடையும் போது இரண்டு மணித்தியாலமும் நாற்பது நிமிடமும் எடுத்துக்கொள்ளும் பாருங்கள் எவ்வளவு நேரம் ஆகும் என்று ஏனென்றால் 290 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அல்லவா அதனால்தான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் சூரியனிலிருந்து 15000 கோடி தூரத்தில் இருக்கும் பூமிக்கு சூரிய ஒளி வருவதற்கே எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது 290 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் யுரேனஸ் கிரகத்திற்கு இரண்டு மணித்தியாலமும் நாற்பது நிமிடமும் கிடைப்பது ஆச்சரியமல்ல ஒருவேளை சூரியன் அழிந்துவிட்டால் யுரேனஸ் கிரகத்தில் இரண்டு மணித்தியாலமும் 40 நிமிடத்திற்கு பின்பு தான் தெரியவரும் என்ன இப்போதைக்கு அந்த இடத்திற்கு எந்த மனிதனும் போனதில்லை எதிர்காலத்தில் அங்கேயும் சென்று ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பங்களும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்போம்.
யுரேனஸ் கிரகத்தின் மைய பகுதியானது மிகவும் கடினமான பாறையால் ஆனது யுரேனஸ் கிரகத்தில் அதிகமாக இருக்கும் கனிமங்கள் தண்ணீர் ஐஸ்கட்டி, மீத்தேன் ஐஸ்கட்டி, அமோனியா ஐஸ் கட்டி ஆகியவை அதிகமாக இருக்கிறது இவை அனைத்தும் மிகவும் சூடான ஐஸ் கட்டிகளாக தான் இருந்து வருகிறது இதனால் யுரேனஸ் கிரகத்தில் அடிக்கடி னவைர மாலைகள் பெய்கின்றது இந்த வைர மழை காபன் ஆக உற்பத்தியாகி பின்னர் மிக அதிகமான அமுக்கம் ஏற்படும் போது வைரம் உருவாகிறது பின்னர் யுரேனஸின் தரைப் பகுதியை அடையும்போது குழம்பு நிலைக்கு மாறிவிடும் இந்த வைரங்கள்.
யுரேனஸ் கிரகத்திலும் எங்கள் பூமியை போல் காந்தப்புலம் உள்ளது ஆனால் இந்த காந்த புலன்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாக உள்ளது என்ன வித்தியாசம் என்றால் பூமியைப் போல் மையக் கருவிலிருந்து காந்தப்புலம் உருவாகவில்லை யுரேனஸ் கிரகத்தில் இந்த கிரகத்தில் எப்பகுதியில் காந்தப்புலம் உருவாகிறது என்றால் யுரேனஸ் கிரகத்தில் சுற்று துவாரத்தில் அதாவது 59 டிகிரி சாய்வாகதில் தான் யுரேனஸ் கிரகத்திற்கான காந்தப்புலம் உருவாகிறது. இந்த காந்தப் புலம் எவ்வாறு உருவாகிறது என்றால் யுரேனஸ் ஐஸ்கட்டி குளம்புகளின் தாக்கத்தின் பிரதி விளைவாகத்தான் இந்த காந்தபுலம் உருவாகி வருகிறது என்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது இதுவும் ஒரு கணிப்பாக தான் உள்ளது ஏனென்றால் இதுவரைக்கும் யுரேனஸ் கிரகத்தை முழுமையாக இன்னும் ஆய்வு செய்யவில்லை விரைவில் யுரேனஸ் கிரகத்தை மிக நெருக்கமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் போது பல மாற்றங்களும் யுரேனஸ் கிரகத்தின் இன்னும் நிறைய தகவல்களை அறியக்கூடியதாக இருக்கும்.
யுரேனஸ் கிரகம் ஒரு வித்தியாசமான கோணத்தில் சரிந்து சுற்றுகின்றது அதாவது 97 டிகிரி சாய்ந்தவாறு சுற்றுகிறது இந்த 97 டிகிரி சாய்மானம் ஆனது தொடர்ந்து 21 வருடங்கள் இருக்குமாம் இப்படி சாய்ந்தபடி யுரேனஸ் சுற்றுவதற்கான காரணம் பல கோடி வருடங்களுக்கு முன்பு யுரேனஸ் கிரகத்தின் மீது மிகப்பெரிய விண்கற்கள் அல்லது ஏதாவது ஒரு கிரகங்கள் மோதி இருக்க வேண்டும் இதனால்தான் 97 டிகிரியில் சாய்ந்தவாறு சுற்றுகிறது என்று விஞ்ஞானிகளின் ஒரு அனுமானங்கள் ஆக இருந்து வருகிறது.
![]() |
யுரேனஸ் கிரகத்தில் வாயேஜர்2 விண்கலம் |
யுரேனஸ் கிரகத்தை முதல் தடவையாக நேரில் சென்று பார்த்த ஒரே ஒரு விண்கலம் என்றால் வாயேஜர்-2 விண்கலம் தான் வாயேஜர் விண்கலம் யுரேனஸ் கிரகத்தை கடந்து செல்லும்போது யுரேனஸ் கிரகத்தில் வெரோனா ரூபீஸ் என்ற மாபெரும் மலையை படம் பிடித்தது இந்த வெரோனா ரூபீஸ் மலைதான் சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய மலையாகவும் உள்ளது சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது. இந்த மலையில் இருந்து குதித்தாள் கீழே வந்து சேருவதற்கு 12 நிமிடங்கள் ஆகிவிடும். யுரேனஸ் கிரகத்திலும் வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளார்கள் இந்த வளையங்களை எப்படி கண்டுபிடித்தார்கள் என்றால் 1977 ஆண்டளவில் SAO158687 என்ற நட்சத்திரத்தை ஆய்வு செய்யும்போது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியானது தடைபட்டு போவதை அவதானித்தார்கள் பின்பு யுரேனஸ் கிரகத்தை மிகவும் ஆழமாக ஆய்வு செய்தபோது தான் சிறிய மெல்லிய வளையம் இருப்பதை கண்டுபிடித்தார்கள் யுரேனஸ் கிரகத்தில் இருக்கும் வளையம் ஆனது 20 மீட்டர் அகலம் கொண்டிருக்கும் என்றும் இதில் அதிகமான சிறிய தூசிகள் ஆன பாறைகளும் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள். யுரேனஸ் கிரகம் ஏனைய கிரகங்கள் போல் தானும் 27 நிலவுகள் வைத்து உள்ளது.எதிர்காலத்தில் யுரேனஸ் கிரகத்தை மிகவும் நெருக்கமாக சென்று ஆய்வு செய்யும் போது சனி கிரகத்தை போல் நிறைய வளையல்களையும் வலயத்திலுள்ள மாற்றங்களை எல்லாவற்றையும் இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்து வருகிறார்கள். எப்படி இருந்தாலும் சூரிய குடும்பத்தில் யுரேனஸ் கிரகமும் ஒரு வித்தியாசமான கிரகமாக தான் உள்ளது யுரேனஸ் கிரகம்.
எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வகம் அதிக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி யுரேனஸ் கிரகத்தில் இருக்கும் அதிசயங்களையும் அதில் நிகழும் மாற்றங்களையும் அறியக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவின் நிறைவு பகுதியை வந்தது அடைகின்றோம். இந்த பதிவில் இடம் பெற்ற அனைத்து தகவல்களும் உங்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும் என்று நினைக்கின்றோம் இந்த பதிவை பற்றி உங்களுடைய கருத்துக்களை எங்கள் இணையதளம் வரவேற்கின்றது.
எங்களுடைய இணையத்தளத்தில் விண்வெளி சம்பந்தமான புதிய தகவல்கள் மற்றும் அறியப்படாத அற்புதமான இடங்கள் அனைத்தையும் நீங்கள் தமிழில் அறிந்துகொள்ள எங்கள் இணைய தளத்துடன் தொடர்ந்துஇணைந்து கொள்ளுங்கள்
மேலும் இணையதளத்தில் உள்ள பதிவுகள்
பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை
The new eight planets in tamil
NASA's future moon missions in tamil
நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது
The James Webb Space Telescope can detect the universe in tamil
0 Comments