Jupiter's Callisto Moon Salt Sea

 வியாழன் கோளில் இரண்டாவது பெரிய நிலா   காலிஸ்டோவில் உப்பு கடல் கண்டுபிடிப்பு

நாம் வாழும் பூமியில் மாத்திரம் தான் கடல் இருக்கின்றது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் நம் பூமியை விட விண்வெளியிலும் ஏனைய இடங்களிலும் கடல்கள் இருப்பதை கண்டுபிடித்து வந்துள்ளார்கள் அந்த வகையில் சூரிய குடும்பத்தில் இரண்டாவதாக இருக்கும் மாபெரும் நிலாவில் உப்பு கடல் இருப்பதை இப்போது கண்டுபிடித்து உளளார்கள் இந்த உப்பு கடலில் உயிரினங்கள் எதுவும் இருக்கின்றதா என்று தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் இந்த கடல் எங்கே இருக்கின்றது என்பதை தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள் 

       வியாழன் கோள்ளும் வியாழன் கோளை சுற்றும் நிலவுகள்


சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்களில் மிகப்பிரமாண்டமாக இருப்பது வியாழன் கோள் இந்த வியாழன் கோள் பூமியிலிருந்து 96 கோடி 80 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருவதோடு வியாழன் கோளில் தான் மிகவும் அதிகமான சூறாவளிகள் ஏற்படுவதுண்டு ஆம் சூரிய குடும்பத்திலேயே  மிக அதிகமான சூறாவளி அடிக்கடி நிகழ்வதும் வியாழன் கோளில் தான் அந்த அளவுக்கு பிரம்மாண்டமான மிகப்பெரிய கிரகமாக இருந்து வரும் வியாழன் கோள்  மிகப்பெரிய பிரம்மாண்டத்திற்கு ஏற்றவாறு நிலாக்களும் வியாழன் கோளில் நிறைந்து கிடைக்கிறது.  வியாழன் கோளில் மாத்திரம் சுமார் 79 நிலாக்கள் உள்ளது. இந்த நிலாக்கள் அனைத்தும் வியாழன் கோளில் வரும் விண்கற்கள் மோதல் மூலமாக வியாழனின் ஈர்ப்பு சக்தியால் தன் வசமாக்கி நிலவாக  உருவாக்கியுள்ளது.

வியாழன் கோளில் இருக்கும்  நான்கு நிலவுகள் ஆன கனிமீடு,காலிஸ்டோ,ஜ ஓ, ஐரோப்பா ஆகிய நிலவுகளை 410 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள் ஆம் இந்த நிலங்களை முதல் தடவையாக கண்டுபிடித்தது 1610 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் திகதி கலிலியோ அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. வியாழன் கோளில் மிகப்பெரிய நிலவானது Ganymede இந்த நிலா புதன் கிரகத்திற்கு பார்க்க மிகப் பெரியது இந்த நிலாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக இருக்கும் நிலா தான் காலிஸ்டோ நிலா இந்த காலிஸ்டோ நிலவானது வியாழன் கோளில் இருந்து 18 லட்சம் 83 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் வியாழன் கோளை சுற்றி வருகிறது காலிஸ்டோ நிலா ஒரு முறை வியாழன் கோளை சுற்றி முடிப்பதற்கு 17 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. காலிஸ்டோ நிலவின் பூமத்திய சுற்றுலாவாது 15 ஆயிரத்து 144 சுற்றளவை கொண்டிருக்கும். காலிஸ்டோ நிலவானது எப்போதும் வியாழன் கோளை ஒரு பக்கம் தான் பார்த்த வண்ணம் இருக்கும் அதாவது எமது பூமியில் இருக்கும் நிலவைப்போல் காலிஸ்டோ நிலாவும் tidally locked ஆக தான் வியாழன் கோளை சுற்றி வருகிறது.

வியாழன் கோளின் நிலவுகளை கண்டுபிடிக்கும் கலிலியோ சித்திர காட்சிகள்

காலிஸ்டோ நிலவை ஆய்வு செய்வதற்காக1990ம் ஆண்டு  நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக அனுப்பப்பட்ட Callisto Spacecraft ஆய்வு செய்த போது தான் இந்த நிலாவில் அதிகமான வித்தியாசமாக பல இடங்கள் தென்படுவதாக  ஆய்வாளர்கள் கண்டறிந்த போது மேலும்  அதிகமாக காலிஸ்டோ நிலாவின் நிலப்பரப்பை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போது தான் காலிஸ்டோ நிலாவில் மேற்பரப்பில் இருந்து 250 ஆழத்தில் உப்பு கடல் இருப்பதை கண்டுபிடித்தார்கள். இந்த உப்பு கடலில் ஏதாவது உயிரினம் இருக்கின்றதா என்பதை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஏனென்றால் கடல் என்றால் எப்படியாவது ஒரு உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அந்த வகையில் காலிஸ்டோ நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உப்பு கடலில் உயிரினங்கள் இருந்தால் காலிஸ்டோ நிலாவில் மனிதர்களும் உயிர் வாழ்வதற்காக வாய்ப்புக்கள் இருக்கக் கூடும் என்பதற்காக தொடர்ந்து. 

காலிஸ்டோ நிலவில் உப்புக்கடல் இருப்பது போலவும் காலிஸ்டோ வின்கலம் வியாழன் கோளை ஆய்வு செய்வது போல் அனிமேஷன் காட்சிகள்

காலிஸ்டோ நிலாவைை Callisto Spacecraft மூலமாக கிடைக்கப்பெறும் தகவல்கள் அனைத்தையும் தொடர்ந்து நாசா ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.காலிஸ்டோ நிலாவில் பூமியை போல் வளிமண்டலம் இல்லாவிட்டாலும் ஓரளவு  மெல்லிய வளிமண்டலம் இருப்பதாகவும் Callisto Spacecraft மூலமாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியனை கோள்கள் சுற்றி வரும் அனிமேஷன் காட்சி இதற்கு மிக பிரமாண்டமாக இருப்பது வியாழன் கோள்

காலிஸ்டோ நிலவில் அதிகமாக இருப்பது நீர் பணி அதாவது ஐஸ் கட்டி மற்றும் காபன் ஆக்சைட், சிலிகேட், கரிம சேர்மங்கள் இவை அனைத்தையும் கொண்டுள்ளது. வியாழன் கோள்ளும் எங்கள் பூமியை போல் ஒரு நீள் வட்ட பாதையில் தான் சூரியனை சுற்றி வருகிறது இதற்கமைய தான் அங்கு உயிரினம் ஏதாவது வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளார்கள்.

காலிஸ்டோ நிலவின் அதிகமான பள்ளங்கள் காணப்படுகிறது இந்த பள்ளங்கள் அனைத்தும் வால் விண்மீன் மற்றும் விண் எரி கற்கள் மூலமாக தாக்கப்பட்டு இருக்கலாம் ஏனென்றால் வியாழன் கோள் சிறுகோள் பட்டியலிலிருந்து வருகின்ற சிறு பாறை துண்டுகள் அனைத்தையும் தன் வசம் எடுத்துக் கொள்வதால் அப்படி வரும் பாறைகள் அனைத்தும் காலிஸ்டோ நிலாவில் மோதுவதற்கான அதிக வாய்ப்புகளும் உள்ளது அதனால் தான் காலிஸ்டோ நிலவில்  நிறைய பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த பள்ளங்கள் அனைத்திலும் ஐஸ் பணிகள் அதிகமாக காணப்படுகிறது ஆனால் காலிஸ்டோ நிலாவின் இருக்கும் பள்ளங்கள் அனைத்தும் எவ்வளவு காலங்கள் ஆனாலும் அப்படியே தான் இருக்கும் இதற்கு காரணம் காலிஸ்டோ நிலாவில் கண்ட இடப்பெயர்வுகள் இல்லாமையால் அங்கு இருக்கும் பள்ளங்கள் அனைத்தும் எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் அப்படியேதான் இருக்கும்.

காலிஸ்டோ நிலவில் கடல் இருப்பதை கண்டுபிடித்து விட்டார்கள் அங்கு ஏதாவது உயிரினம் இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது அல்லவா அந்த வகையில் இன்னும் காலிஸ்டோ நிலாவை முழுமையாக ஆய்வு செய்யும் போது நிறைய விடயங்களை கண்டறிய முடியும். ஒருவேளை எங்கள் பூமியை போல் காலிஸ்டோ நிலவில் இருக்கும் கடலும் இருந்தால் நிச்சயம் உயிரினம் எதுவும் இருக்கும் அப்படி இருந்தால் இனி நாசாவின் அடுத்த ஆய்வுகள் செவ்வாயை தொடர்ந்து காலிஸ்டோ நிலவாக தான் இருக்கும் அங்கேயும் செவ்வாய் கிரகத்தில் அனுப்பப்பட்டிருக்கும் ரோலர்கள் காலிஸ்டோ நிலவுக்கும் அனுப்புவதற்கான திட்டங்களை மேற்கொள்வார்கள்.

விண்வெளி ஆய்வுகள் மேற்கொண்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகி இருந்த போதும் இதுவரைக்கும் எங்கள் பூமியை அடுத்து எந்த கிரகத்திலும் அல்லது நிலவுகளிலும் மனித இனம் வாழலாம் என்று உறுதியாக சொல்லவில்லை இதற்காக நாசா உட்பட உலகின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் அனைத்தும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டுதான் வருகிறது நிச்சயம் ஒருநாள் ஏதாவது ஒரு கிரகம் அல்லது நிலா மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியவர்கள் அல்லது அதற்கான சூழ்நிலைகள் அமைந்துள்ள கிரகங்களையும் அல்லது நிலவுகளையும் கண்டுபிடிப்பார்கள்

.விஞ்ஞானமும் விண்வெளி ஆய்வுகளும் பல மாற்றங்களுக்கு அடிக்கடி மாறிக் கொண்டுதான் இருக்கும் ஏனென்றால் விண்வெளி என்பது மிக பிரம்மாண்டமான பரந்த இடம் இதில் மனிதனின் அறிவுக்கு ஏற்ற வகையில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விண்வெளியில் பல ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் கண்டுபிடிப்புகள் என்ற வகையில் பார்க்கும்பது  அதில் நிறைய மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் விண்வெளியில் ஒரு விடயத்தை கண்ட பிடிக்கும்போது ஒரு விதமான தகவலாக இருக்கும் அந்த தகவல்களையும் மேலும் ஆழமாக ஆய்வு செய்யும் போது தான். அதிலிருந்து நிறைய மாற்றங்கள் ஆன புதிய தகவல்கள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியும் வகையில் இருக்கும்.  அந்தவகையில் விண்வெளி ஆராய்ச்சியில் எந்த கண்டுபிடிப்புகளும் நிரந்தரமானது அல்ல விண்வெளியில் தேடல் என்பது ஒரு முடிவற்றது. அதேபோன்று விண்வெளியை முழுமையாக ஆய்வு செய்வதற்கு இப்போதைய தொழில் நுட்பங்கள் அனைத்தும் ஓரளவு வெற்றிகள் தந்தாலும் எதிர்காலத்தில் இதைவிட அதிநவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும் போதுதான். விண்வெளியை மனிதன் ஓரளவாவது கற்றுக் கொள்வதற்கு அதிகமாக வாய்ப்புகள் உருவாகும். கூறிக்கொண்டு இந்த பதிவின் நிறைவு பாதிக்கு வந்து அடைந்து விட்டோம். இந்த பதிவில் நீங்கள் வியாழன் கோளில் இருக்கும் காலிஸ்டோ நிலாவின் விடயங்கள் அனைத்தையும் தெளிவாக அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை எங்கள் இணையதளம் வரவேற்கின்றது.
எங்கள் இணைய தளத்துடன் நீங்கள் தொடர்ந்து இணைந்திருந்தால் விண்வெளியில் அற்புதமான தகவல்கள் அனைத்தையும் தமிழில் நீங்கள் எளிய முறையில் அறிந்து கொள்வதற்கு எங்கள் இணையதளம் உங்களுக்கு வழிவகுத்து தருகிறது இதனால் எங்கள் இணைய தளத்துடன் இணைந்து கொண்டு விண்வெளி தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் இணையதளத்தில் உள்ள பதிவுகள்

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுகள்

பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை

The new eight planets in tamil 

NASA's future moon missions in tamil

நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது

The James Webb Space Telescope can detect the universe in tamil

OSIRIS-REx spacecraft is speeding to Earth in tamil

The largest universe in space

Post a Comment

0 Comments