NASA's future moon missions in tamil

 NASA's new moon travel plans in tamil


ஓரியன் விண்கலம் (படம் கடன் நாசா)
பூமியிலிருந்து நிலவை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும் இந்த அழகிய நிலவில் மனிதர்கள் குடியேற முடியாதா என்ற கேள்வி பலமுறை வந்து சென்று கொண்டிருந்தபோது இப்போது நாசா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்கள் ஆம் அந்த திட்டமானது ஆர்ட்டெமிஸ் திட்டம் இந்த திட்டத்தில் நிலவின் தென் துருவப் பகுதியில் மனிதர்களை கொண்டு செல்வதும் அங்கு இருந்து நிறைய ஆராய்ச்சிகளை செய்வதற்கும் இந்த புதிய திட்டத்தை வகுத்து வருகிறார்கள்.

மனித வரலாற்றிலேயே முதல் முறையாக நிலாவுக்கு சென்றது 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி ரசியாவின் லூனா 2 என்ற விண்கலம் தான் முதல் தடவையாக நிலவை சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருளாகும் இதை தொடர்ந்துதான் அமெரிக்கா நிலவுக்கு செல்வதற்கான ஆயுதங்களை செய்ய தொடங்கினார்கள் அதன்பின்பு 1969 ஜூலை 21 ஆம் திகதி நிலவில் முதல்தடவையாக மனிதன் கால் பதித்தாள் இதைத்தொடர்ந்து ஆறுமுறை பயணத்தை மேற்கொண்ட அமெரிக்கா 12 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி வைத்தது.

ஆர்ட்டெமிஸ் திட்டம் 

SLS ராக்கெட் மூலம் நிலவுக்கு செல்லும் பயணத்தை ஒரு கலைஞரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டது

இந்த திட்டம் எப்படி செயல்படப் போகிறது என்றாள் ஓரியன் என்ற மாபெரும் விண்கலம் ஒன்றை தயார் செய்து உள்ளார்கள் இதில் மனிதர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான அதி உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஓரியன் விண்கலமானது கிட்டத்தட்ட 40 டன் எடையை சுமந்து செல்லும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இவை அனைத்தையும் விண்ணுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் மிக அதி சக்தி வாய்ந்த ராக்கெட் வேண்டும் இதற்காகவே எஸ் எல் எஸ் என்ற அதிசக்திவாய்ந்த ராக்கெட்டை தயார் செய்து அனுப்ப உள்ளார்கள் இந்த பயணமானது நிலவையும் தாண்டி பயணம் செல்லக் கூடிய வகையில் இருக்கப்போகின்றது அதாவது 280.000 மயில் தொலைவில் நிலவையும் கடந்துசெல்ல போக இருக்கிறது இந்த ஓரியன் விண்கலமானது.

ஓரியன் விண்கலம் நிலவை ஆய்வு செய்வதை கலைஞரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டது

நாசாவின் நிலவின் பயணத்தின் நோக்கங்கள் என்னவாக உள்ளது என்றால் எங்கள் பூமியை வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் போல் நிலவிலும் ஒரு சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைப்பதே இதனுடைய நோக்கமாகும் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் மாதிரி நிலவில் அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி நிலையம் ஆனது பூமியை சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட சற்று சிறியதாகத் தான் இருக்கும் இதிலிருந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கும் மீண்டும் சர்வதேச நிலவின் விண்வெளி நிலையத்தில் இணைந்து கொள்வதற்குமான திட்டங்களை வகுத்து வந்துள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலமாக ஏனைய கிரகங்களை ஆய்வு செய்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கும் என்பதற்காகத்தான் சந்திரனில் இவ்வாறான நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நிலவின் பயணம் இவ்வளவு இவ்வளவு காலம் தாமதம் ஆனதற்கு காரணம் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் திட்டத்தை வகுப்பதற்காக தான் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. இந்த திட்டம் மட்டும் மாபெரும் வெற்றி அடைந்தால் நிலவுக்கு செல்வது மிகவும் எளிய முறையாக மாறிவிடும். இந்த ஆய்வைத் தொடர்ந்து நிலவில் வீடுகள் அமைப்பதற்கான திட்டங்களையும் வகுத்து உள்ளார்கள் வீடுகள் அமைப்பதும் மற்றும் தண்ணீர் வசதிகள் அமைப்பதற்கான திட்டங்களும் இந்த ஆர்ட்டெமிஸ் திட்டமிடல் உள்ளடங்கலாக இருந்துவருகிறது. உண்மையாக சொல்லப்போனால் நிலவை இதுவரைக்கும் முழுமையாக ஆய்வு செய்ய வில்லை என்பது தான் உண்மையான விடயம் நிலவில் இன்னும் மறைந்திருக்கும் நிறைய மர்மமான விடயங்கள் உள்ளது இந்த புதிய திட்டத்தில் நாசா நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய தொடங்கினால் நிலவைப் பற்றி நிறைய மர்மமான விடயங்கள் வெளி வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முதலில் உறுதி செய்தது இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம் தான் இதைத்தொடர்ந்து சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான பல ஆய்வுகளை செய்து வந்தார்கள் இதில் ஹபிள் தொலைநோக்கியும் தனது பங்கினை வழங்கி வந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் மிகவும் கவலைக்குரிய விடயம் இந்தியாவினால் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய போது செயலிழந்து போனது தான் இந்த சந்திரயான் விண்கலம் மட்டும் சரியாக இறங்கி இருந்தால் சந்திரனின் தென் துருவப் பகுதியில் மனிதன் இதுவரை அறியாத விடயங்களை அறிந்திருக்க முடியும். மீண்டும் இந்தியா இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை மிக அதிக தொழில்நுட்பங்களை கொண்டு தயாரித்து வருகிறார்கள் வெகுவிரைவில் நிலவை நோக்கி சந்திரயான்-3 விண்கலம் பயணமாகும்.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் சரியாக செயல்பட்டால் நிலவுக்கு இலகுவாக சென்று வருவதற்கும் அங்கு மனிதர்களை குடியமர்த்துவதற்கு ஆன முயற்சிகளை எடுப்பதற்கும் இந்த திட்டம் வழிவகுக்கும் நீங்கள் நினைக்கலாம் ஏன் எங்கள் பூமியிலிருந்து நிலவுக்கு சென்று வாழ வேண்டும் அங்கதானே சுவாசிப்பதற்கு காற்றும் இல்லை நிலையான ஈர்ப்பு சக்தியும் இல்லை அப்படி இருக்கையில் அங்கு போய் எப்படி குடியமர முடியும் என்ற கேள்வியும் நீங்கள் கேட்பது சரிதான் ஆனால் மனிதனின் ஆர்வம் என்பது முடிவற்றது தான். இதுவரை காலமும் இருக்கும் தொழில்நுட்பத்தில் இவ்வளவு முயற்சிகளை அடைந்து பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வந்துள்ள விண்வெளித்துறையில் நிலவில் மனிதர்களை குடியமர்த்த போகிறார்கள் என்றால் அவர்கள் அங்கு நிலையாக இருப்பதற்கான வசதிகளை எதிர்கால தொழில்நுட்பத்தில் மேற்கொள்வார்கள் என்பதே எனது எதிர்பார்ப்பு ஏனென்றால் மனிதனின் மூளையும் விண்வெளியின் எல்லையற்ற ஒரு ஆற்றலை கொன்ற மூளையாகும். 1920 ஆம் ஆண்டு தொடக்கம் விண்வெளி துறைகளில் எவ்வளவு ஆய்வுகளை மேற்கொண்டு பல வெற்றிகளை கண்ட மனித இனம் இன்னும் எதிர்காலத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் மூலமாக விண்வெளியை மிக நுட்பமாக ஆய்வுகளை செய்வார்கள். என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்பதை சொல்லிக்கொண்டு நிலவில் எதிர்கால குடியமர்வு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் உங்கள் அனைவரையும் விண்வெளியில் அறிவை தேடிக் கொள்ளுங்கள் அப்போதுதான் விண்வெளியில் நடக்கும் அதிசயங்களையும் பல தகவல்களையும் நீங்கள் அறிந்து கொள்ளும் போது மனித இனத்தின் முன்னேற்றத்தையும் அதனுடைய தொழில்நுட்பத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

விண்வெளியில் அதிகமான தகவல்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்கள் இணைய தளத்துடன் தொடர்ந்து இணைந்து கொள்ளுங்கள் விண்வெளி சம்பந்தமான விடயங்கள் அனைத்தையும் தமிழில் பதிவு செய்கின்றோம்.

Post a Comment

0 Comments