சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் சுற்றும் வேகம்
![]() |
சூரியனை கோள்கள் சுற்றும் அனிமேஷன் காட்சிகள் |
சூரிய குடும்பத்தில் பூமி உட்பட அனைத்து கோள்களும் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் தனக்கென ஒரு சுற்றுப்பாதையை உருவாக்கிக்கொண்டு சூரியனை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த கோள்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு வேகத்தில் சுழன்று கொண்டு சூரியனை சுற்றி வருகிறது என்ற விடயத்தை இந்த ஒரே பதிவில் நீங்கள் அறிந்து கொள்வதற்காக இந்த பதிவில் மிகத் தெளிவாக பதிவு செய்யப்படுகிறது இதன் மூலமாக விண்வெளியில் இருக்கும் அனைத்து கோள்களும் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள் சரி வாருங்கள் ஒவ்வொரு கோள்களும் சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றி வருகிறது என்பதை பார்ப்போம்.
புதன்
புதன் கோளானது தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் ஆகிவிடும் புதன் கிரகம் தன்னைத்தானே ஒரு முறை சுற்றி வருவதற்கு இதேபோன்று சூரியனை ஒரு நொடிக்கு 47 ஆயிரம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருகிறது ஒரு நொடிக்கு 47 ஆயிரம் கிலோ மீட்டர் என்றால் புதன் கோளின் வேகம் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள் நீங்கள் உங்கள் கைவிரலால் ஒரு சொடக்கு போடும்போது புதன் கோள் 47 ஆயிரம் கிலோமீட்டர் சென்றிருக்கும். புதன் கிரகம் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 10 கிலோமீட்டரில் சுற்றுவதால் புதன் கோளில் ஒரு நாள் என்பது 1363 மணி நேரம் ஆகும்.இதேபோல் புதன் கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 88 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
வெள்ளி
புதன் கிரகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக இருக்கும் கோள் தான் வெள்ளி கோள் இந்த வெள்ளி கோளானது தன்னைத் தானே 6.5 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது இந்த வேகமானது மிகவும் குறைந்த வேகம் இதனால் வெள்ளி கிரகத்தில் ஒரு நாள் என்பது 5832 மணி நேரமாகும். வெள்ளி கிரகம் சூரியனை ஒரு நொடிக்கு 35000 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது அதாவது ஒரு மணித்தியாலத்தில் வெள்ளி கிரகம் தனது சுற்றுவட்டப்பாதையில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 77 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. இப்படி இந்த வேகத்தில் வெள்ளி கிரகம் சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிப்பதற்கு 224.7 நாட்கள் ஆகும். வெள்ளி கிரகத்தின் ஒரு வருடம் என்பது 224.7 நாட்கள்தான் ஒரு வருடம் ஆகும் பார்க்கப் போனால் எங்கள் பூமியைவிட சற்று குறைவான நாட்கள் தான் வெள்ளி கிரகத்தில் ஒரு வருடம் என்பதாகும்.
பூமி
சூரிய குடும்பத்திலேயே மிகவும் அற்புதமானது எங்கள்பூமி ஏனென்றால் அனைத்து கோள்களை விட உயிரினங்கள் என்பது இந்த பூமியில் மாத்திரம் தான் இருக்கிறது என்பதால் எங்கள் பூமி உண்மையில் ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் நாங்கள் சொல்ல வேண்டும். அந்த வகையில் பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் 0.4 ஆகும் இது ஒரு கிலோ மீட்டருக்கும் மிகவும் குறைவான வேகம் தான் இந்த வேகத்தில் சுற்றுவதால் தான் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணித்தியாலங்கள் எடுத்துக் கொள்கிறது இதேபோன்று பூமி சூரியனை சுற்றும் வேகம் ஆனது ஒரு நொடிக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றுகிறது இந்த வேகத்தில் பூமியானது ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு லட்சத்தி பத்தாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. இப்படி இந்த வேகத்தில் சுற்றுவதால் தான் பூமியானது சூரியனை சுற்றி முடிப்பதற்கு 365 நாட்கள் அடுத்து கொள்ளும்போதுதான் பூமிக்கு ஒரு வருடம் ஆகிறது.
செவ்வாய்
செவ்வாய் கிரகம் கிட்டத்தட்ட எங்கள் பூமியை போல் தான் இருந்து வருகிறது அதாவது தன்னைத்தானே ஒரு சுற்று சுற்றுவதற்கு 0.2 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சூரியனை ஒரு நொடிக்கு 24000 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது செவ்வாய் கிரகத்தில் எங்கள் பூமியை விட சற்று நிமிடத்தில் மாத்திரம்தான் வித்தியாசம் அதாவது செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24.6 நிமிடங்கள்தான் ஒரு நாள் ஆகும் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது 687 நாட்களாகும் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் ஆகுவதற்கு. என்னதான் எங்கள் பூமியை போல் சில விடயங்களில் செவ்வாய் கிரகம் அமைந்தாலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இதுவரைக்கும் இல்லை ஆனால் இப்போது நாசா செவ்வாய் கிரகத்தை மனிதர்கள் குடியமர்த்துவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தை மனிதர்களை குடியமர்த்துவதற்கு நாசாவின் ஆய்வு வெற்றியடைந்தால் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
வியாழன்
சூரிய குடும்பத்திலேயே மிகவும் பிரமாண்டமான இருப்பது வியாழன் கோள் இந்த வியாழன் கோள் தன்னைத்தானே 12000 கிலோ மீட்டர் வேகத்தில் வியாழன் கோள் ஒரு சுற்று சுற்றி விடும் இப்படி வியாழன் கோள் சுற்றுவதால் வியாழன் கோளில் ஒரு நாள் என்பது 10 மணி நேரம் தான் எடுத்துக் கொள்கிறது ஆம் வியாழன் கோளில் ஒரு நாள் என்பது பத்து மணி நேரம் தான் அதாவது இரவு ஐந்து மணித்தியாலமும் பகலில் 5 மணித்தியாலமும் இருக்கும். வியாழன் கோளானது சூரியனை ஒரு மணித்தியாலத்தில் 13 ஆயிரம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் சூரியனை சுற்றி வருவதால் வியாழன் கோளில் ஒரு வருடம் என்பது 4330 நாட்களாகும் வியாழன் கோளுக்குஒரு வருடம் முடிவடைவதற்கு.
சனி
சனி கிரகமானது தன்னைத்தானே ஒரு நொடிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றிக் கொள்கிறது இப்படி சனி கிரகம் தன்னைத்தானே ஒரு மணித்தியாலத்துக்கு 36 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக் கொள்வதால் தான் சனி கிரகத்தில் ஒரு நாள் என்பது 10 மணித்தியாலம் மாத்திரம் தான். சனி கிரகமானது தன்னைத் தானே ஒரு நொடிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றிக்கொண்டு சூரியனை ஒரு நொடிக்கு 34 ஆயிரத்து 884 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றுகிறது இப்படி சனி கிரகம் சூரியனை ஒரு சுற்று முடிப்பதற்கு பத்தாயிரத்து 751 நாட்கள் எடுத்துக்கொள்கிறது இதுதான் சனிக்கிரகத்தின் ஒரு வருடம் ஆகும் சனி கிரகத்தில்.
யுரேனஸ்
யுரேனஸ் கிரகம் ஒரு நொடிக்கு 4.14 என்ற வேகத்தில் ஒரு மணித்தியாலத்தில் 14794 கிலோ மீட்டர் வேகத்தில் தன்னை சுற்றி வருகிறது. யுரேனஸ் கிரகத்தில் ஒரு நாள் என்பது 17 மணித்தியாலமும் 14 நிமிடமும் 24 நொடிகள் தான் யுரேனஸ் கிரகத்தில் ஒரு நாள் ஆகும். யுரேனஸ் கிரகம் சூரியனை ஒரு நொடிக்கு 8.6 என்ற கிலோ மீட்டர் வேகத்திலும் அதே போன்று ஒரு மணித்தியாலத்தில் யுரேனஸ் கிரகம் சூரியனை 24 ஆயிரத்து 480 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றிவருகிறது. யுரேனஸ் கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 ஆயிரத்து 666 நாட்கள் எடுத்துக்கொள்ளும் இந்த நாட்கள்தான் கிரகத்தின் ஒரு வருடம் ஆகும்.
நெப்டியூன்
நெப்டியூன் கிரகமானது தன்னை ஒருமுறை சுற்றி வருவதற்கு 2.6 கிலோமீட்டரில் சுற்றுகிறது, நெப்டியூன் கிரகத்தில் ஒரு நாள் என்பது 16 மணித்தியாலங்கள் அதேபோன்று யுரேனஸ் கிரகம் சூரியனை ஒரு நொடிக்கு 5.43 கிலோ மீட்டர் வேகத்திலும் அதேபோன்று நெப்டியூன் கிரகம் சூரியனை ஒரு மணித்தியாலத்தில் 19 ஆயிரத்து 548 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. யுரேனஸ் கிரகம் முழுமையாக சூரியனை சுற்றி முடிக்க 60 ஆயிரத்து 190 நாட்கள் எடுத்துக்கொள்ளும். எங்கள் பூமியில் ஒரு வருடம் என்பது 365 நாட்கள் தான் ஆனால் யுரேனஸ் கிரகத்தில் ஒரு வருடம் என்பது 60 ஆயிரத்து 190 நாட்கள் ஆகும்.
ப்ளூட்டோ
சூரிய குடும்பத்திலேயே மிகச்சிறிய இருப்பது ப்ளூட்டோ தான் ஆனால் 2006 ஆம் ஆண்டளவில் ப்ளூட்டோவை சூரிய குடும்பத்தில் இருந்து விலக்கி விட்டார்கள் இதற்கு காரணம் சரியாக தனது சுற்றுவட்டப்பாதையில் புளூட்டோ வராமல் நெப்டியூன் கிரகத்திற்கு முன்பாகவும் தனது பாதையை அமைத்துக் கொண்டு வருவதால் புளூட்டோவை சூரிய குடும்பத்திலிருந்து விலக்கி விட்டார்கள் ஏனென்றால் சூரிய குடும்பத்தில் சுற்றி வரும் அனைத்து கோள்களும் தங்களுடைய பாதையில் சீராக சுற்றி வருவதால் அனைத்து கிரகங்களும் கிரகம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. ஆனால் புளூட்டோ மாத்திரம் தனது பாதையில் சீராக சுற்றாமல் போனதால் ப்ளூட்டோவை ஒரு கிரகம் இல்லை என்று சூரிய குடும்பத்தில் இருந்து விளக்கி விட்டார்கள். இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த கோளான புளூட்டோவும் ஒரு கோள் என்று நினைத்துக்கொண்டு புளூட்டோவின் சுற்றுவட்ட பாதையையும் பதிவு செய்கின்றோம்.
புளூட்டோ சூரியனிலிருந்து 590 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த புளூட்டோ கிரகம் தன்னை ஒரு முறை சுற்றுவது ஒரு நொடிக்கு 0.0.3 என்ற வேகத்தில் சுற்றிக்கொண்டு ஒரு மணித்தியாலத்தில் 123 கிலோ மீட்டர் வேகத்தில் தன்னை சுற்றிக் கொள்கிறது அதேபோன்று சூரியனையும் ஒரு நொடிக்கு 0.7 கிலோ மீட்டர் வேகத்திலும் அதேபோன்று ஒரு மணித்தியாலத்திற்கு புளூட்டோ கிரகம் சூரியனை 17 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது புளூட்டோ கிரகத்தில் ஒரு வருடம் என்பது 90 ஆயிரத்து 520 நாட்கள் தான் ஒரு வருடம் புளூட்டோவில் ஏன் இவ்வளவு வருடங்கள் எடுக்கிறது என்றால் சூரியனிலிருந்து 590 கோடி கிலோமீட்டர் தூரத்தில் புளூட்டோ இருக்கிறது இதனால் சூரியனின் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால் ப்ளூட்டோ மெல்ல மெல்ல தான் சூரியனை சுற்றி வரும்.
சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்களின் வேகங்களை பார்த்துவிட்டோம் அதேபோன்று சூரிய குடும்பத்தில் இருக்கும் அனைத்து கிரகங்களும் மற்றும் சிறுகோள் பட்டியல்களும் இணைந்து எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது என்றால் ஒரு நொடிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது இவை அனைத்தும் ஒரு மணித்தியாலத்திற்கு வெற்றி லட்சத்து 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகம் வரை சென்றிருக்கும். அடுத்து இந்த சூரிய குடும்பம் அனைத்தும் மற்றும் 40,000 கோடி நட்சத்திரங்களைக் கொண்ட பால்வெளி மண்டலமும் மாபெரும் சூப்பர் மிக்ஸி என்ற கருந்துளையை சுற்றி வருகிறது. ஒரு லட்சம் ஒளியாண்டுகள் விட்டத்தைக் கொண்டுள்ள பால்வழி அண்டமானது ஒரு சுற்று சுற்றி வருவதற்கு 23 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
மேலும் எங்கள் இணையதளத்தில் இருக்கும் பதிவுகள் உங்கள் பார்வைக்கு
பூமியை நோக்கி வரும் இரண்டாவது சூரியன்
பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை
The new eight planets in tamil
NASA's future moon missions in tamil
நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது
The James Webb Space Telescope can detect the universe in tamil
OSIRIS-REx spacecraft is speeding to Earth in tamil
Jupiter's Callisto Moon Salt Sea
NASA discovers planet without sun
0 Comments