செவ்வாய் கிரகத்தின் போபோஸ் நிலாவின் புதிய கண்டுபிடிப்பின் தகவல்கள்
செவ்வாய் கிரகத்தின் இரண்டு நிலவுகள் உள்ளது. போபோஸ், டிமோஸை இந்த இரண்டு நிலவுகளும்தான் செவ்வாய்கிரகத்தில் இருந்து வருகையில் இதில் உருளைக்கிழங்கு போல் இருப்பதுதான் போபோஸ் நிலாவு. இந்த நிலாவை மிக நெருக்கமாக சென்று நாசாவின் விண்கலம் ஆன Reconnaissance orbiter போபோஸ் நிலாவின் படங்களை மிகத் தெள்ளத் தெளிவாக படம் எடுத்துள்ளது. Reconnaissance orbiter இல் பொருத்தப்பட்டு இருக்கும் Hirise camera மூலமாக போபோஸ் நிலாவை படம் பிடித்துள்ளார்கள். இதுவரைக்கும் எந்த விண்கலமும் இவ்வளவு தெளிவாக போபோஸ் நிலாவை படம் எடுத்ததில்லை இந்த படங்கள் அனைத்தையும் பார்த்தவுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்புக்கு உள்ளாக்கிய வகையில் இந்த படங்கள் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.
![]() |
Reconnaissance Orbite Images taken with a high-tech camera at a distance of 6800 km from the surface of the Phobos moon |
மட்டபோபோஸ் நிலாவை 1877 இல் ஆசாப் ஹால் கண்டுபிடித்த போதும் இதை இவ்வளவு நெருக்கமாக பார்க்க முடியுமா என்று அக்காலகட்டத்தில் அவர் நினைத்திருக்கக் கூடும். ஆனால் அதை இப்போது நாசா வெற்றிகரமாக அருகில் சென்று படம் பிடித்துள்ளது. போபோஸ் நிலாவை Reconnaissance orbiter படம் எடுக்கும்போது போபோஸ் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 6,800 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து Hirise camera மூலமாக மிகத் தெள்ளத் தெளிவாக படத்தை எடுத்துள்ளது. இந்தப் படத்தை அனைத்தையும் நீங்கள் பாருங்கள் எவ்வளவு தெளிவாக இருப்பதை உண்மையில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்பதை இவ்வாறான தொழில்நுட்பங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது. சரி இந்த நிலாவை பற்றி முழுமையாக கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.
![]() |
The Bobos moon orbits Mars three times at a distance of 60,900 k.m |
செவ்வாய் கிரகத்திலிருந்து 60 ஆயிரத்து 900 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தான் செவ்வாய் கிரகத்தை ஒரு நொடிக்கு 2.1 கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை போபோஸ் நிலா மூன்று முறை சுற்றி முடிக்கும் இதற்காக இது எடுத்துக் கொள்ளும் நேரம் ஆனது 7 மணித்தியாலம் 31 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். செவ்வாய் கிரகத்தை முழுமையாக சுற்றி முடிப்பதற்கு. இந்த நிலாவின் விட்டம் 22 கிலோமீட்டர் மட்டும்தான் ஆனால் எங்கள் நிலாவின் விட்டம் 3474 கிலோமீட்டர் பார்க்கப் போனால் எங்கள் நிலவை விட மிக சிறியதாக தான் இது இருக்கிறது வானில் ஒரு உருளைக்கிழங்கு மிதந்து வருவது போல் ஒரு குட்டியான ஒரு நிலா தான் போபோஸ்.
![]() |
Researchers have suggested that the gray matter in the Phobos lunar crater may be metal. |
இங்கு வழங்கப்பட்டுள்ள படத்தை நன்கு உன்னிப்பாக பாருங்கள் அதில் ஒரு பள்ளம் இருக்கின்றது இந்த பள்ளம் தான் ஆசாப் ஹால் வானிலை ஆராய்ச்சியாளரின் மனைவியின் பெயரைத்தான் இந்த பள்ளத்தாக்கு வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஏஞ்சலினா என்ற பெயர்தான். இந்தப் பள்ளத்தின் அருகே சாம்பல் நிறத்தில் காணப்படுவதை பார்த்தவுடன் ஆராய்ச்சியாளர்கள் வியந்து போனார்கள் இதில் இருக்கும் சாம்பல் நிறத்தில் இருப்பது மெட்டல் ஆகவும் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் இந்த நிலவின் படமானது அதிக திறன் கொண்ட படம் என்பதால் இதைப் பார்த்தவுடன் ஆராய்ச்சியாளர்கள் வியப்படையும் வகையில் தான் செய்கிறது. இதைப்போல் போபோஸ் நிலாவில் இருக்கும் பள்ளம் எப்படி தோன்றியிருக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது.போபோஸ் நிலா செவ்வாய் கிரகத்தின் ஒரு பக்கமாக இணைந்திருப்பதால் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை மூலமாக இந்த பள்ளம் தோன்றி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
போபோஸ் நிலா செவ்வாய் கிரகத்தை மெல்ல மெல்ல நோக்கி செல்வதால் கிரகத்தில் விழுந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் நூறு வருடங்களுக்கு ஒரு தடவை போபோஸ் நிலா 1.8 மீட்டர் என்ற வகையில் செவ்வாய் கிரகத்தை நெருங்கி செல்கிறது. ஆனால் செவ்வாய்க் கிரகத்தில் விழுவதற்கு இன்னும் 50 பில்லியன் ஆண்டுகளுக்குள் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். அப்படி இந்த போபோஸ் நிலா விழும்போது செவ்வாய் கிரகத்திற்கு வளையங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். என்ன இந்த நிலா விழும்போது நாங்கள் அனைவரும் இருப்போமோ என்று தான் தெரியாது வருகிற சந்ததிகள் சரி இதை அறிந்து கொள்ளட்டும்.
விண்வெளி கண்டுபிடிப்புகளுக்கும் தேடலுக்கும் ஒருபோதும் முடிவுகள் இல்லை என்பதை இவ்வாறான கண்டுபிடிப்புகள் மூலமாக தெரியவருகிறது .ஒரு புதிய கண்டுபிடிப்பின் மூலமாக தான் இன்னொரு கண்டுபிடிப்பை உருவாக்க முடியும். என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. என்பதை தெரிவித்துக் கொண்டு இந்த பதவி நிறைவு பகுதியை வந்து அடைந்து கொண்டு இந்த பதிவை பற்றி உங்களுடைய கருத்துக்களை எங்கள் இணையதளம் வரவேற்கின்றது. இதேபோன்று விண்வெளி தகவல்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வதற்கு எங்கள் இணைய தளத்துடன் தொடர்ந்து இணைந்து கொள்ளுங்கள்.
மேலும் எங்கள் இணையதளத்தில் இருக்கும் பதிவுகள் உங்கள் பார்வைக்கு
சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் சுற்றும் வேகம்
பூமியை நோக்கி வரும் இரண்டாவது சூரியன்
பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை
The new eight planets in tamil
NASA's future moon missions in tamil
நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது
The James Webb Space Telescope can detect the universe in tamil
OSIRIS-REx spacecraft is speeding to Earth in tamil
Jupiter's Callisto Moon Salt Sea
NASA discovers planet without sun
0 Comments