The James Webb Space Telescope, which was developed at great expense to trace the origin of space in tamil
பிரபஞ்சம் தோன்றி சுமார் 13 கோடியே 80 லட்சம் வருடங்களாக ஆகிவிட்டது இந்தப் பிரபஞ்சம் மாபெரும் பெரும் வெடிப்பின் மூலமாக தான் தோன்றி இருக்கலாம் என்று விஞ்ஞானத்தின் ஆய்வுகள் மூலம் தெரிய வந்த போதும். இந்த நிகழ்வு எவ்வாறு ஆரம்பித்தது என்பதைப் பற்றி இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய முடியாத நிலையில் இருப்பதே உண்மையான விடயமாகும்.
விண்வெளியில் கிரகங்கள் எப்படி உருவாகியது அதனுடைய ஆரம்ப காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்வதற்கு இப்போது இருக்கின்ற தொழில்நுட்பங்கள் போதிய வசதிகள் இல்லாமையினால் அதனுடைய ஆய்வுகள் மிகவும் குறைந்து கொண்டுதான் வருகிறது இப்போது விண்வெளியில் இருந்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக சுமார் 1,400 ஒளியாண்டுகள் தூரம் வரைதான் அதனால் கண்காணிக்க முடியும் அதையும் தாண்டி விண்வெளியில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்காக இன்னும் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி கொண்டு வேண்டும் அப்படி இருந்தால் மாத்திரம் தான் விண்வெளியின் ஆரம்பகாலம் எப்படி இருந்தது என்பதை ஓரளவு கூட அறிந்து கொள்வதற்கு முடியும் என்பதற்காக மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி இந்த தொலைநோக்கி மூலமாக விண்வெளியின் ஆரம்பகாலம் எப்படி இருந்தது கிரகங்கள் எப்படி உருவாகிறது நட்சத்திரங்களின் உருவாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி மிகத் துல்லியமாக ஆய்வு செய்வதற்கான அதிக தொழில் நுட்பங்களை கொண்டு இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தயார் செய்து உள்ளார்கள்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி
ஜேம்ஸ் விண்வெளி தொலைநோக்கி அல்லது ஒரு கூட்டு முயற்சி தயாரிப்பாகும் நாசா, ஐரோப்பியா, கனேடிய ஆகிய விண்வெளி நிறுவனங்களால் கூட்டு முயற்சியாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தயாராகிவருகிறது ஜேம்ஸ் தொலைநோக்கியின் பிரதானமாக இருக்கும் தொழில்நுட்பமானது அக சிவப்பு நிற மணியாகும் இந்த தொழில்நுட்பங்கள் மூலமாக தான் விண்வெளியைப் பற்றி மிகத் துல்லியமாக ஆய்வு செய்ய இருக்கின்றது ஜேம்ஸ் தொலைநோக்கி சாதாரண தொலைநோக்கி போல் இல்லாமல் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்கள்.
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் சன்ஷீல்ட் நீளம் அகலம்
72 அடி நீளம் 36 அடி அகலம் ஜேம்ஸ் வெப் பில் பொருத்தப்பட்டிருக்கும் சன்ஷீல்ட் இந்த சன்ஷீல்ட் சூரிய வெப்பத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பாதிக்காமல் இருப்பதற்காக ஒரு குடை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது ஐந்து அடுக்கு வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்ஷீல்ட் -370 வெப்பத்தை குறைக்கும் அளவுக்கு வல்லமை கொண்டது . மற்றும் ஜேம்ஸ் வெப்ஸ் விண்வெளி தொலைநோக்கி பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடி 21 அடி சுற்றளவு உள்ளது.
ஜேம்ஸ் web's விண்வெளி தொலைநோக்கி எவ்வாறாக செயல்பட உள்ளது
ஹப்பிள் தொலைநோக்கி பூமியில் இருந்து 570 கிலோ மீட்டரில் இருந்து விண்வெளியை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஆனது சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் வரை சென்று விண்வெளி ஆராய்ச்சி செய்ய உள்ளது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள எல் 2 என்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளார்கள் ஏனென்றால் ஜேம்ஸ் பூமிக்கு அருகாமையில் இருந்து ஆய்வு செய்யத் தொடங்கினார் அதனுடைய அகசிவப்பு தொழில்நுட்பங்களை கொண்டு விண்வெளி ஆய்வு செய்யும்போது ஏற்கனவே விண்வெளி ஆராய்ச்சி செய்வதற்காக பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உலா வருகின்றது அதனுடைய இடையூறுகள் அதிகமாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் விண்வெளியில் 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஆய்வு செய்யும்போது இன்னும் அதிகமான தூரத்தை கண்காணிக்கவும் முடியும். இதனால் விண்வெளியில் ஆரம்பம் எப்படி இருக்கும் கிரகங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது நட்சத்திரங்களும் எவ்வாறாக உருவாகின்றது. என்பதை ஆய்வு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் இந்த ஜேம்ஸ் விண்வெளி தொலைநோக்கி இதனால் விண்வெளியில் ஆராய்ச்சிகள் இன்னும் புதிய மாற்றத்தை கொண்டுவரும் இதனால் எதிர்வரும் காலங்களில் இன்னும் விண்வெளியை பற்றி நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இந்த ஜேம்ஸ் பெப் தொலை நோக்கி தொழில் நுட்பங்களின் மூலமாக அறியக்கூடியதாக அமையும். இவ்வளவு பிரமாண்டமான தொலைநோக்கியை விண்ணில் ஏவுவது என்பது சாதாரண விடயம் அல்ல அதையும் விஞ்ஞானிகள் மிகவும் நுட்பமாக திட்டத்தைத் தீட்டி ஜேம்ஸ் வெப்பில் பொருத்தப்பட்டிருக்கும் 21 அடி கண்ணாடி மற்றும் சன்ஷீல்ட் ஆகியவற்றை மடித்து சுருக்கி ராக்கெட்டில் பொருத்தும் வகையில் வடிவமைத்து வந்துள்ளார்கள்.
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நவம்பர் மாதம் 2021 ஆம் வருடம் விண்ணுக்கு அரியேன் 5 ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு ஏவுவதற்கு தயார் செய்து வருகிறார்கள் இன்னும் சில மாதங்களில் விண்வெளியை நோக்கி பயணமாக உள்ளது ஜேம்ஸ் விண்வெளி தொலைநோக்கி இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஆனது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது விண்வெளியில் நடக்கும் எதிர்கால மாற்றங்கள் மிகவும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஆச்சரியங்களை.
மனிதனின் விண்வெளி ஆராய்ச்சி என்பது இன்னும் பல தொழில்நுட்பங்களை உருவாக்கி வந்து கொண்டுதான் உள்ளது இன்னும் 50 வருடங்களுக்கு பின்பு விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேலும் அதிகரிப்பதற்கு இப்போதைய தொழில் நுட்பங்கள் அதற்கு அடித்தளமாக இருந்துவருகிறது. என்பதை சொல்லிக்கொண்டு இந்த பதிவு நிறைவு பகுதிக்கு வருகின்றோம்.
எங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்யும் விண்வெளி தகவல் அனைத்தும் உங்களுக்கும் பயன் தரும் வகையில் இருந்தால் உங்கள் கருத்துக்களை எங்கள் இணையதளத்திற்கு பதிவு செய்யுங்கள் உடனுக்குடன் விண்வெளி தகவல்களை தமிழில் அறிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்து கொள்ளுங்கள்
மேலும் இணையதளத்தில் உள்ள பதிவுகள்
பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் மிக்ஸி கருந்துளை
The new eight planets in tamil
NASA's future moon missions in tamil
நட்சத்திரங்கள் எங்கே எப்படி உருவாகிறது
0 Comments