The new eight planets in tamil

 புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது

விண்வெளியில் எல்லைகளை இது வரைக்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை இந்த பரந்த விண்வெளியில் ஏராளமான பிரபஞ்சங்கள் இருந்து இருக்குது. அதில் எமது சூரிய குடும்பம் இருக்கும் பிரபஞ்சமானது பால்வெளி அண்டம் இந்த அண்டத்தில் தான் எட்டு கோள்களைக் கொண்ட எமது சூரிய குடும்பம் அமைந்துள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியும் எமது சூரிய குடும்பத்தை போல் இன்னும் ஒரு சூரிய குடும்பம் உள்ளது நாசாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த சூரிய குடும்பம் எப்படி இருக்கும் இதில் உயிரினம் வாழ முடியுமா? எங்கள் பூமியை போல் அனைத்து வசதிகளும் கொண்ட கிரகங்கள் உள்ளதா என்பதை நீங்கள் அறிய ஆவலாக இருப்பீர்கள் என்று எனக்கு புரிகிறது வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்த புதிய சூரிய குடும்பத்தை பற்றி பார்ப்போம்.

கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ள சூரிய சூரிய குடும்பத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள் ஆம் எங்கள் பூமியிலிருந்து 2840 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு பிடித்தார்கள் இந்த நட்சத்திரம் தான் கெப்லர் 90 இது எங்களுடைய சூரியனை போல் இருப்பதாகவும் ஆனால் சூரியனை விட இளம் நட்சத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள் எப்படி இது இளம் நட்சத்திரமாக இருக்கும் என்பதை எப்படி கணித்தார்கள் என்றாள் இவ்வளவு தொலைவில் இருந்து கூட மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும் இதனால் இது இளம் நட்சத்திரமாக இருக்கக்கூடும் கிட்டத்தட்ட இது உருவாகி 200 கோடி வருடங்கள் மாத்திரம் இருப்பதாக ஆய்வாளர்களின் கணித்துள்ளார்கள். 


கெப்லர் 90 நட்சத்திரத்தை கண்டுபிடித்த பின்பு அதைத்தொடர்ந்து ஆராய்ச்சியை செய்து கொண்டிருந்தபோது 14 நாட்களுக்கு ஒரு முறை கெப்லர் 90 நட்சத்திரத்தை ஒரு பாறை கடந்து செல்வதைப் போல் கவனித்தார்கள் இதைத் தொடர்ந்து மிகவும் பல கருவிகளை பயன்படுத்தி இன்னும் துல்லியமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது தான் மிகவும் ஆச்சரியம் தரும் வகையில் பல கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்தார்கள் ஆம் இந்த கெப்லர் 90 நட்சத்திரத்தை சுற்றி எட்டு கோள்கள் சுற்றிவருவதை கண்டுபிடித்தார்கள் இந்த எட்டு கோள்களும் எங்களுடைய சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்களைப் போல் தான் கெப்லர் 90 நட்சத்திரத்தை சுற்றி வருவதை உறுதி செய்தார்கள். இந்த எட்டு கோள்களையும் கெப்லர்-b, கெப்லர்-C, கெப்லர்-i,கெப்லர்-D,கெப்லர்-E,கெப்லர்-F,கெப்லர்-G  கெப்லர்- H என்ற பெயர்களை வைத்து வரிசை படுத்தி உள்ளார்கள்.


கெப்லர் 90 நட்சத்திரத்தை சுற்றிவரும் கோள்களில் ஒன்று எங்களுடைய பூமியைப் போல் சுற்றி வருவது எங்கள் பூமி சூரியனிடமிருந்து பதினையாயிரம் கோடி தூரத்தில் உள்ளது இதேபோன்றுதான் கெப்லர் 90 நட்சத்திரத்திலிருந்து எட்டாவது இடத்தில் இருக்கும் ஒரு கோல் சுற்றிவருகிறது கவனித்தார்கள் இந்த கேபிலர் 90 நட்சத்திரத்தை சுற்றி வரும் எட்டு கோள்களும் எவ்வளவு நாட்களுக்குள் தனது சூரியனை சுற்றி வருகிறது பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக தான் உள்ளது ஒவ்வொரு கோள்களும் எங்களுடைய சூரிய குடும்பத்தில் இருக்கும் அளவிலேயே தான் கெப்லர் 90 நட்சத்திரத்தையும் சுற்றி வருகிறது.

கெப்லர் 90 நட்சத்திரத்தை சுற்றும் கோள்களின் நாட்கள்

1 ) கெப்லர்-B -7

2) கெப்லர்-C-8

3) கெப்லர்- I -14

4) கெப்லர்-D -59

5) கெப்லர்-E - 91

6) கெப்லர்-F -124

7)கெப்லர்-G -210

8) கெப்லர்- H -331

கெப்லர் 90 நட்சத்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்கள் அனைத்திலும் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை பார்த்தால் நிச்சயமாக அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் ஒரு ஏமாற்றத்துக்கு உரிய விடயமாக உள்ளது ஆம் கிட்டத்தட்ட கெப்லர்- H கோளானது எங்களுடைய பூமியை போல் தான் தனது சூரியனை சுற்றி வருகிறது அதாவது 15000 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் தான் கெப்லர்- H கோள்சுற்றிவருகிறது இருந்தாலும் எங்கள் பூமியை போல் இல்லை ஆம் இது முழுக்க வாய்வு கோள் என்பதால் எங்கள் பூமியை போல் உயிர்களிலும் வாழ்வதற்கான வாய்ப்புகள் இந்த கோள்ளில் இல்லை என்பதை ஆய்வுகளில் தெரியப்படுத்தும் போது மிகவும் கவலையாக தான் உள்ளது. ஆம் ஒரு பூமியை போல் கோள்களை கண்டுபிடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த போதும் கடைசியில் அது ஏமாற்றத்தை தான் அடைந்தோம் சரி இதை விட மற்ற ஏனைய கோள்களில் பூமியை போல் உயிர் வாழ முடியுமா என்பதை பார்த்தால் அதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இல்லை ஏனென்றால் கெப்லர் 90 நட்சத்திரத்திற்கு அருகாமையில் இருக்கும் கோள்கள் அனைத்தும் கெப்லர் 90 நட்சத்திரத்தின் ஒரு பக்கத்துக்கு title lock உள்ளது மீதமுள்ள கோள்களும். ஆம் எங்களுடைய நிலவும் எப்படி எங்கள் பூமியை ஒரு பக்கம் மாத்திரம் பார்த்துக்கொண்டே இருக்கின்றதோ அதே போன்றுதான் அங்குள்ள கோள்களும் கெப்லர் 90 நட்சத்திரத்தை பார்த்தவண்ணம் அனைத்து கோள்களும் இருக்கின்றது இதனால் நிச்சயமாக கோள்களின் ஒரு பகுதி அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு  இருக்கும். மறு பகுதியில் மிகவும் குளிர்மையாக இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் இதனால் நிச்சயம் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் குறைவாகத்தான் இருக்கும்.

மனிதனின் விஞ்ஞான தொழில்நுட்பங்கள் மூலமாக பல கோடி பிரபஞ்சங்கள் இருப்பதை கண்டுபிடித்து வருகிறார்கள் ஆனால் இந்த பிரபஞ்சங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது இதனுடைய ஆரம்பகாலம் எப்படி இருந்திருக்கும் என்பதை பற்றி அறிவதற்கு இன்னும் அதி சக்திவாய்ந்த தொழில்நுட்பங்கள் வேண்டும் இதற்காகவே மனிதனின் அறிவாற்றலை பயன்படுத்தி மிகவும் அற்புதமாக தயாரித்து கொண்டு உள்ளார்கள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி  இன்னும் சில மாதங்களுக்குள் விண்வெளிக்கு ஏவப்படுவதக்கு உள்ளது. இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்கு ஏவியதும் பிரபஞ்சத்தின் தோற்றங்கள் மற்றும் நட்சத்திரங்களின் உருவாக்கங்கள் கிரகங்கள் எவ்வாறு உருவாகிறது என்பவற்றை அறிந்து கொள்வதற்கு ஜேம்ஸ் விண்வெளி தொலைநோக்கி அதி சக்தி வாய்ந்ததாக செயல்பாடும் இதனால் விண்வெளி ஆய்வுகளில் இதுவரை அறிந்திராத ஆச்சரியங்களும் அற்புதங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி வெற்றிகரமாக பயணத்தை மேற்கொண்டார்கள் இன்னும் பல கிரகங்களை கண்டுபிடித்து எதிர்கால சந்ததிகளின் விண்வெளி ஆய்வுகளுக்கு பயன் தரும் வகையில் இருக்கும். என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவின் நிறைவு பகுதிக்கு வருகின்றோம்.

விண்வெளி தகவல்கள் அனைத்தையும் எங்கள் இணையதளத்தில் நீங்கள் மிகவும் எளிய முறையில் அறிந்து கொள்வதற்கு எங்கள் இணைய தளம் உங்களுக்கு வழிவகுத்து தருகிறது தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் உங்கள் ஆதரவை தாருங்கள் தொடர்ந்து எங்கள் இணைய தளத்துடன் இணைந்து இருங்கள் புதிய தகவல்கள் மிகவும் பயன் தரும் வகையில் உங்களுக்கு பதிவு செய்யப்படும்.


Post a Comment

0 Comments